Published:Updated:

உ.பி: ஒரு வாரமாக படிக்கட்டிலேயே தங்கியிருந்த வயதான தம்பதியினர் தங்களின் வீட்டை மீட்டெடுத்த கதை!

சுனில் குமார்-ராக்கி குப்தா

ஒரு வாரகாலமாக தங்களுடைய சொந்த வீட்டுக்கு வெளியே உள்ள படிக்கட்டில் தங்கிவந்த உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வயதான தம்பதியினரின் கதை இது.

உ.பி: ஒரு வாரமாக படிக்கட்டிலேயே தங்கியிருந்த வயதான தம்பதியினர் தங்களின் வீட்டை மீட்டெடுத்த கதை!

ஒரு வாரகாலமாக தங்களுடைய சொந்த வீட்டுக்கு வெளியே உள்ள படிக்கட்டில் தங்கிவந்த உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வயதான தம்பதியினரின் கதை இது.

Published:Updated:
சுனில் குமார்-ராக்கி குப்தா

ஒரு வாரகாலமாக தங்களுடைய சொந்த வீட்டுக்கு வெளியே உள்ள படிக்கட்டில் தங்கிவந்த உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர் தற்போது அவர்களது வீட்டை மீட்டெடுத்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த வயதான தம்பதியினர், சுனில் குமார் - ராக்கி குப்தா. இவர்களுக்கு நொய்டாவில் ஸ்ரீ ராதா ஸ்கை கார்டன் சொசைட்டி (Shri Radha Sky Garden Society) என்ற அடுக்குமாடிக் குடியிருப்பில் சொந்தமாக ஒரு வீடு உள்ளது.

ஆனால் சுனில் குமார் மும்பையில் வேலை செய்து வந்ததால் அந்த வீட்டைக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ப்ரீத்தி என்பவருக்கு 11 மாதக்கால லீஸ்-க்குக் கொடுத்திருந்தார். இந்த நிலையில் மும்பையில் உள்ள பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சுனில் குமார் இந்த ஆண்டு மார்ச் மாதம் ஓய்வு பெற்றுள்ளார். இதனால் குப்தாவுடன் நொய்டாவுக்குத் திரும்பிய சுனில் குமார் வீட்டை லீஸ்-க்கு விட்டிருப்பதால் அவர்களது உறவினர்கள் வீட்டில் தங்கியிருந்தனர்.

லீஸ்-க்கு விடப்பட்ட 11 மாதக்காலம் இந்த ஜூலை மாதத்துடன் நிறைவடைவதால் கடந்த ஏப்ரல் மாதமே ப்ரீத்தியிடம் வீட்டை காலி செய்வது தொடர்பாகப் பேசியுள்ளார் சுனில் குமார். மீண்டும் கடந்த 19ம் தேதி ப்ரீத்தியிடம் வீட்டை காலி செய்யுமாறு போனில் கூறியிருக்கிறார். முதலில் சரி என்று சொன்ன ப்ரீத்தி பிறகு வீட்டை காலி செய்ய முடியாது என்றும், இது தன்னுடைய வீடு என்றும் கூறியிருக்கிறார். இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தபொழுது இது சிவில் வழக்கு என்று கூறிவிட்டது.

பின் செய்வதறியாது இருந்த அந்த வயதான தம்பதியினர் அந்த வீட்டிற்கு வெளியே உள்ள படிக்கட்டிலேயே ஒரு வாரமாகத் தங்கிவந்தனர். இந்தச் சூழலில் தனியார் செய்தி நிறுவனம் ஒன்று இவர்களின் நிலைமையைச் செய்தியாக வெளியிட்டது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி நொய்டா முழுவதும் பேசுபொருளாக மாறி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து ப்ரீத்தி தற்போது தான் அந்த வீட்டை காலி செய்து விடுவதாகவும், தனது பொருள்களை எடுக்க ஒரு நாள் மட்டும் அவகாசம் வேண்டும் என்று கேட்டுள்ளார். படிக்கட்டில் தங்கிவந்த வயதான தம்பதியினர் தற்பொழுது அவர்களது சொந்த வீட்டை மீட்டுள்ளனர். தங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என்று ராக்கி குப்தா ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!