Published:Updated:

300 நாய்களைப் பராமரிக்கும் 80 வயது மூதாட்டி; கடும் குளிரில் தவிக்கவிட்ட அதிகாரிகள்! - என்ன நடந்தது?

பிரதிமா தேவி
News
பிரதிமா தேவி ( ட்விட்டர் )

அரசின் இத்தனை வரைமுறைகளையும் பின்பற்றி, டெல்லியின் சாகேத் பகுதியில் 80 வயது முதியப் பெண் பிரதிமா தேவி என்பவர், சுமார் 250 முதல் 300 நாய்களைப் பராமரித்து வருகிறார்.

300 நாய்களைப் பராமரிக்கும் 80 வயது மூதாட்டி; கடும் குளிரில் தவிக்கவிட்ட அதிகாரிகள்! - என்ன நடந்தது?

அரசின் இத்தனை வரைமுறைகளையும் பின்பற்றி, டெல்லியின் சாகேத் பகுதியில் 80 வயது முதியப் பெண் பிரதிமா தேவி என்பவர், சுமார் 250 முதல் 300 நாய்களைப் பராமரித்து வருகிறார்.

Published:Updated:
பிரதிமா தேவி
News
பிரதிமா தேவி ( ட்விட்டர் )

டெல்லி மற்றும் அதன் அண்டை நகரங்களான குருகிராம், நொய்டா, காஜியாபாத் உள்ளிட்ட பகுதிகளில், தெருநாய்களின் தொல்லை அதிகரித்திருப்பதாக தொடர் புகார்கள் எழுந்தன. அதையடுத்து மாநகராட்சி, நாய்களின் தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக, தெருநாய்களுக்கு உணவளிப்பவர்களை அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர். மேலும், செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள், அவற்றை மாநகராட்சியில் பதிவுசெய்யுமாறும் வலியுறுத்தியிருக்கின்றனர்.

மரத்தடியில் நாய்கள்
மரத்தடியில் நாய்கள்
ட்விட்டர்

அரசின் இத்தனை வரைமுறைகளையும் பின்பற்றி, டெல்லியின் சாகேத் பகுதியில் 80 வயது முதியப் பெண் பிரதிமா தேவி என்பவர், சுமார் 250 முதல் 300 நாய்களைப் பராமரித்து வருகிறார். பிரதிமா தேவி மேற்கு வங்காளத்தின் நந்திகிராமைச் சேர்ந்தவர். அவருடைய மகன்கள் இங்கு வேலை செய்வதால் 1984-ல் டெல்லிக்கு வந்ததாகக் குறிப்பிடுகிறார். அன்றுமுதல் இன்றுவரை நாய்களுக்கு உணவளித்து அவற்றைப் பராமரித்து வருகிறார். எப்போதும் சாகேத் பகுதியில் அவர் தங்கியிருக்கும் இடத்தில் நாய்கள் புடைசூழ காணப்படும்.

இந்த நிலையில், பிரதிமா தேவி நாய்களுடன் வசித்துவந்த கடையை, டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் திடீரென இடித்து தரைமட்டமாக்கியிருக்கின்றனர். அதனால், அவர் நூற்றுக்கணக்கான நாய்களுடன் கடும் குளிரில் டெல்லியின் வீதிகளில் தஞ்சமடைந்திருக்கிறார்.

இது தொடர்பாகப் பேசிய அவரின் மகன் தப்பன், ``1984-ல் நாங்கள் ஒரு டீக்கடை வைத்திருந்தோம். எங்கள் அம்மா ஸ்கிராப் விற்றுவந்தார். அப்போது வீட்டில் ஒரு நாய் இருந்தது… ஆனாலும், அப்போதே 20-25 நாய்களுக்கு உணவளித்து வந்தோம். நாளாக நாளாக... மெதுவாக எண்ணிக்கை அதிகரித்தது. இருந்தாலும், நாங்கள் உணவளிப்பதை நிறுத்தவில்லை. சிலர் தங்கள் வளர்ப்பு நாய்களைக்கூட எங்களிடம் விட்டுச் செல்வார்கள்.

மரத்தடியில் நாய்கள்
மரத்தடியில் நாய்கள்
ட்விட்டர்

நாய்களைப் பராமரிக்க, அவற்றை தங்கவைக்க ஒரு கூடாரம், அவற்றுக்கு உணவு என எல்லாவற்றையும் இங்கிருந்த ஒரு சிகரெட் கடையின் மூலம் செய்துவந்தோம். நாய்களைப் பராமரிக்க அதிகாரிகளிடமிருந்து எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. இங்கிருக்கும் நாய்களை நாங்கள் சரியாக பராமரிப்பதால், நன்றாக நடத்துவதால் அவை இங்கேயே இருக்கின்றன. அனைத்து நாய்களுக்கும் தடுப்பூசி மற்றும் கருத்தடையும் செய்யப்படுகிறது.

ஆனால், அவ்வப்போது டெல்லி மாநகராட்சி, நாய்களுக்கான கூடாரத்தை அப்புறப்படுத்தி வந்தது. 2013, 2018-ம் ஆண்டுகளில் நாய்களின் தங்குமிடம் இடிக்கப்பட்டது. அதோடு சிகரெட் கடையும் இடிக்கப்பட்டது. அதன் பிறகு சிலர் நன்கொடை வழங்குவார்கள். இங்கிருக்கும் தியேட்டருக்கு வரும் நாய் பிரியர்கள் சிலர் அவ்வப்போது உதவுவார்கள். நாய்களுக்கு உணவாக பால், ரொட்டி, கோழிக்கறி, அரிசி, பிஸ்கட் மற்றும் பிராண்டட் நாய் உணவு வழங்கப்படுகிறது. இதற்காக மாதம் ரூ.1.5 லட்சம் செலவாகிறது" எனத் தெரிவித்தார்.

பிரதிமா தேவி
பிரதிமா தேவி
ட்விட்டர்

இது தொடர்பாக பிரதிமா தேவி, ``பல ஆண்டுகளாக நாய்களை வளர்த்துவருகிறேன். ஆனால், டெல்லி எம்.சி.டி பணியாளர்கள் என்னுடைய கடையை இடித்து என் உடைமைகளை வெளியில் போட்டுவிட்டுச் சென்றனர். மேலும், என் நாய்களையும் அடித்தனர். நான் இப்போது என் நாய்களுடன் மரத்தடியில் அமர்ந்திருக்கிறேன். நான் தங்குவதற்கும், நாய்களை தங்கவைப்பதற்கும் அரசு உரிய ஆவண செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.