Published:Updated:

காற்று மாசுபாடு: E-Commerce மற்றும் Delivery நிறுவனங்கள் மின்சார வாகனங்களுக்கு மாறுவது அவசியமா?!

காற்று மாசு

காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த இ-காமர்ஸ் மற்றும் டெலிவரி நிறுவனங்கள் மின்சார வாகனங்களுக்கு மாறுவது அவசியம் என ஆய்வு முடிவில் தகவல்.

காற்று மாசுபாடு: E-Commerce மற்றும் Delivery நிறுவனங்கள் மின்சார வாகனங்களுக்கு மாறுவது அவசியமா?!

காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த இ-காமர்ஸ் மற்றும் டெலிவரி நிறுவனங்கள் மின்சார வாகனங்களுக்கு மாறுவது அவசியம் என ஆய்வு முடிவில் தகவல்.

Published:Updated:
காற்று மாசு
`Sustainable Mobility Network' மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சில முக்கிய அமைப்புகளால் நியமிக்கப்பட்ட `CMSR' எனும் ஆலோசனைக் குழு, காற்று மாசு மற்றும் கால நிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக வாடிக்கையாளர்களிடம் கருத்துக்கணிப்பு கேட்கும் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. மும்பை, புனே, டெல்லி, கொல்கத்தா, பெங்களூர் ஆகிய ஐந்து பெரு நகரங்களைச் சேர்ந்த 9048 வாடிக்கையாளர்களிடம் எடுக்கப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் சென்னையில் மட்டும் 1508 நபர்களிடம் விநியோக நிறுவனங்களின் மின்வாகன மாற்றுத் திட்டங்கள் குறித்து கருத்துகள் கேட்கப்பட்டன.

இந்த ஆய்வின் முடிவில் டெல்லி, மும்பை, புனே, கொல்கத்தா, பெங்களூர் மற்றும் சென்னை முழுவதும் உள்ள 67% நுகர்வோர்கள் இ-காமர்ஸ், உணவு, மளிகை பொருள்கள் மற்றும் டெலிவரி நிறுவனங்கள் காற்று மாசுபாட்டைக் குறைக்க மின்சார வாகனகளுக்கு மாறுவது மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ளனர். குறிப்பாக, சென்னையில் உள்ள 89% நுகர்வோர் இதே கருத்தைத் தெரிவித்துள்ளனர் என்று ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

டெலிவரி வாகனங்கள் (Representational Image)
டெலிவரி வாகனங்கள் (Representational Image)
பெரிய நிறுவனங்கள் தங்கள் டெலிவரி வாகனங்களை எலெக்ட்ரிக் வாகனமாக மாற்ற முன்வந்தால், அதை மற்ற நிறுவனங்களும் பின்பற்றும் என்று பெரும்பாலானவர்கள் கூறியுள்ளனர்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும், இந்த ஆய்வில் பதிலளித்தவர்களில் 80% சென்னையின் அதிக்கப்படியான காற்று மாசிற்கு முதன்மையாகக் குறிப்பிட்ட காரணங்களில் ஒன்று last mile delivery. மேலும் 89% நபர்கள் காலநிலை மாற்றம் மற்றும் காற்று மாசை எதிர்கொள்வதற்கு இந்நிறுவனங்கள் மின்வாகனங்களுக்கு மாறுவதையே முக்கியத் தீர்வாய் பரிந்துரைத்துள்ளார்கள்.

டெலிவரி வாகனங்கள் (Representational Image)
டெலிவரி வாகனங்கள் (Representational Image)

இது பற்றிப் பேசிய CMSR-இன் ஆலோசனைக் குழுவின் இயக்குநர் கஜேந்திர ராய், ”சென்னையைப் போன்ற வளர்ந்த நகரங்கள் இத்தகைய நிறுவனங்களுக்கான பிரதான சந்தை இடங்களாக விளங்குவதால் சென்னை முழுவதுமுள்ள வாடிக்கையாளர்களிடம் நடத்திய கணக்கெடுப்பின் முடிவுகளைக் கொண்டு விநியோகத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் குறித்தான அவர்களின் கருத்துகள் இந்த ஆய்வில் தொகுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தக் கணக்கெடுப்பில் பங்குபெற்ற பெரும்பாலானவர்கள் (94%) 18 முதல் 45 வயதிற்குட்பட்டவர்கள் என்பதை உறுதிபடுத்திக்கொண்டோம். ஏனென்றால் இந்நிறுவனங்களின் பிரதான வாடிக்கையாளர்கள் அவர்களே” என்று கூறினார்.

ஆய்வு முடிவுகளின் முக்கிய அம்சங்கள்:

  1. டெல்லி, மும்பை, புனே, கொல்கத்தா, பெங்களூர் மற்றும் சென்னை முழுவதும் உள்ள 78% நுகர்வோர் கடைசி மைல் டெலிவரி வாகனங்கள் காற்று மாசுபாட்டிற்கு பங்களிக்கின்றன என்பதை உணர்ந்துள்ளார்கள்.

  2. சென்னை, டெல்லி, மும்பை, புனே, கொல்கத்தா மற்றும் பெங்களூர் முழுவதும் இ-காமர்ஸ், உணவு, மளிகை பொருள்கள் மற்றும் பார்சல் டெலிவரி சேவைகள் சார்ந்த 9048 நுகர்வோரிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

  3. சென்னையில் உள்ள 86% நுகர்வோர்கள் கடைசி மைல் டெலிவரியில் ஒரு பெரிய நிறுவனம் மின்சார வாகனங்களுக்கு மாறுவது, பெரும் மாற்றத்தை உருவாக்கி மற்ற நிறுவனங்களையும் அவ்வாறு செய்ய வைக்க உதவும் என நம்புகிறார்கள்.

  4. சென்னையில் உள்ள 89% நுகர்வோர் இ-காமர்ஸ், உணவு, மளிகை பொருள்கள் மற்றும் டெலிவரி நிறுவனங்களுக்கு காற்று மாசுபாட்டை குறைக்க மின்சார வாகனகளுக்கு மாறுவது "மிகவும் முக்கியமானது" என நம்புகிறார்கள்.

  5. 80% சென்னையில் உள்ள நுகர்வோர் கடைசி மைல் டெலிவரிக்கு பயன்படுத்தும் வாகனங்கள் காற்று மாசுபாட்டிற்கு பங்களிப்பதாக உணர்கிறார்கள்.

  6. சென்னையில் உள்ள 8% நுகர்வோர் டெலிவரி நிறுவனங்கள் மின்சார வாகனங்களைப் பயன்படுத்தி டெலிவரி எடுக்க முயற்சிகள் செய்வதைப் பற்றி அறிந்திருக்கிறார்கள்.

  7. சென்னையில் உள்ள 70% டெலிவரி நிறுவனங்கள் மின்சார வாகனங்களுக்கு மாறுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என நினைக்கிறார்கள்.

  8. 78% டெல்லிவாசிகள், டெல்லி அரசு தனது வரைவு ஒப்பந்தத்தில் டெலிவரி நிறுவனங்களுக்கு நிர்ணயித்த இலக்குகளை அடைவதாக உறுதியளிக்கும் நிறுவனங்களிடமிருந்து ஷாப்பிங் செய்ய விரும்புகிறார்கள்.

  9. 65% மும்பை மக்களும் 78% புனே மக்ககளும், மகாராஷ்டிரா அரசாங்கத்தால் அதன் மின்வாகன கொள்கையில் டெலிவரி நிறுவனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதாக உறுதியளிக்கும் நிறுவனங்களிடமிருந்து ஷாப்பிங் செய்ய விரும்புகிறார்கள்.

  10. 64% நுகர்வோர், டெலிவரி நிறுவனங்கள் தங்கள் போக்குவரத்தை மின்சார வாகனங்களுக்கு மாற்றும் செயலில் ஈடுபட வேண்டும் என நினைக்கிறார்கள்.

  11. 12% நுகர்வோர் மட்டுமே விநியோக நிறுவனங்கள் மின்சார வாகனங்களைப் பயன்படுத்தி பொருள்கள் விநியோகிக்கும் முயற்சிகள் செய்வதைப் பற்றி அறிந்திருக்கிறார்கள்.

  12. 93% நுகர்வோர் கடைசி மைல் டெலிவரியில் ஒரு பெரிய நிறுவனம் மின்சார வாகனங்களுக்கு மாறுவதால், பெரும் மாற்றத்தை உருவாக்கி மற்ற நிறுவனங்களையும் அவ்வாறு செய்ய வைக்க உதவும் என நம்புகிறார்கள்.

  13. டெல்லி, மும்பை, புனே, கொல்கத்தா, பெங்களூர் மற்றும் சென்னை முழுவதும் உள்ள 67% நுகர்வோர்கள் இ-காமர்ஸ், உணவு, மளிகை பொருள்கள் மற்றும் டெலிவரி நிறுவனங்கள் காற்று மாசுபாட்டை குறைக்க மின்சார வாகனகளுக்கு மாறுவது "மிகவும் முக்கியமானது" என நம்புகிறார்கள்.

இது குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த கோ.சுந்தர்ராஜன் பேசுகையில், "இந்த ஆய்வின் முடிவுகள் மாநில அளவில் கண்டிப்பான திட்டங்கள் மற்றும் அவற்றுக்கான ஆதரவு எத்தனை அவசியமானது என்பதை நமக்கு உணர்த்துகின்றது. மகாராஷ்டிரா மற்றும் டெல்லி இதற்கு சிறந்த உதாரணங்களாக உள்ளன. தமிழ்நாடு அரசு, மகாராஷ்டிரா மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களை உதாரணமாகக் கொண்டு இணைய- வர்த்தகம் மற்றும் டெலிவரி நிறுவனங்கள் தங்கள் போக்குவரத்தை முற்றிலுமாக மின்வாகனப் பயன்பாட்டிற்கு மாற்ற வேண்டிய கட்டாயத்தை தமிழ்நாடு அரசு ஏற்படுத்த வேண்டும்.

கோ.சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள்
கோ.சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள்

தமிழ்நாடு அரசின் மின்வாகனத் திட்டங்கள் மின்சார வாகன உற்பத்திக்கானச் சூழலை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளது என்றாலும் அதே நேரத்தில் அவை பயன்பாட்டிற்கு வரத்தேவையான சூழலையும் மாற்றத்தை நோக்கிய நகர்வையும் குறிப்பாக இணைய வர்த்தகத் துறையின் விற்பனை மற்றும் விநியோகப் பிரிவில் உருவாக்குவதிலும் கவனம் செல்லுத்துவது அவசியமானது" எனக் கூறினார்.