Published:Updated:

`பெட்ரோலுக்கு ரூ.10; டீசலுக்கு ரூ.13..!' - நாட்டின் செலவினங்களுக்காக உயர்த்தப்பட்ட கலால் வரி

பெட்ரோல், டீசல்
பெட்ரோல், டீசல்

இந்த வரி உயர்வு மூலம் கிடைக்கும் வருவாய் நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செலவினங்களுக்குப் பயன்படுத்தப்படும் என மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்

இந்தியாவில் மூன்றாம்கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், தமிழகம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை உயர்த்தின. ஊரடங்கால் ஏற்பட்ட நிதிப் பற்றாக்குறை இதற்குக் காரணமாகக் கூறப்பட்டது.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

இந்த நிலையில், நேற்று மத்திய அரசு பெட்ரோல் மீது லிட்டருக்கு 10 ரூபாயும், டீசல் மீது 13 ரூபாயும் கலால் வரி உயர்த்துவதாக அறிவித்திருக்கிறது. இந்த உத்தரவு நள்ளிரவு முதலே அமலுக்கு வந்தது. கலால் வரி உயர்த்தப்பட்டாலும், நேரடியாக சில்லறை விற்பனையில் விலை ஏற்றம் இருக்காது என்றும் வரி உயர்வை நிறுவனங்களே ஏற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் இந்த வரி உயர்வு எதிரொலிக்கவில்லை.

அரிவாளோடு பாய்ந்த இளைஞர்; தலைதெறிக்க ஓடிய வி.ஏ.ஓ! - கொரோனா ஸ்டிக்கரால் நேர்ந்த விபரீதம்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ள இந்தக் காலகட்டத்தில், இந்த வரி உயர்வு மூலம் அரசுக்கு 1.6 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. இந்தப் புதிய வரி உயர்வுக்குப் பின் பெட்ரோல் மீதான மொத்த கலால் வரி லிட்டருக்கு ரூ.32.98 ஆகவும் டீசல் மீதான, மொத்த கலால் வரியானது லிட்டருக்கு ரூ. 31.83 ஆகவும் இருக்கிறது.

பெட்ரோல், டீசல்
பெட்ரோல், டீசல்

இந்த வரி உயர்வு மூலம் கிடைக்கும் வருவாய் நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செலவினங்களுக்கு பயன்படுத்தப்படும் என மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

பொதுவாக பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை 1 ரூபாய் உயர்த்தினால், அரசின் ஆண்டு வருமானத்தில் கூடுதலாக 14,500 கோடி கூடுதலாக கிடைக்கும். எனினும் இது சாதாரண கால கணக்குதான். தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக பெட்ரோல், டீசல் தேவையும் குறைந்திருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு