Published:Updated:

உத்தரகாண்ட்: பூமிக்குள் புதையத் தொடங்கிய ஜோஷிமத் நகரம்... அச்சத்தில் மக்கள் - காரணம் என்ன?

புதையுறும் ஜோஷிமத் நகரம்
News
புதையுறும் ஜோஷிமத் நகரம் ( ட்விட்டர் )

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜோஷிமத் என்ற மலைநகரமே பூமிக்குள் புதையும் ஆபத்தில் இருக்கிறது. நேற்று ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக 600 வீடுகளிலும், சாலைகளிலும் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.

உத்தரகாண்ட்: பூமிக்குள் புதையத் தொடங்கிய ஜோஷிமத் நகரம்... அச்சத்தில் மக்கள் - காரணம் என்ன?

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜோஷிமத் என்ற மலைநகரமே பூமிக்குள் புதையும் ஆபத்தில் இருக்கிறது. நேற்று ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக 600 வீடுகளிலும், சாலைகளிலும் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.

Published:Updated:
புதையுறும் ஜோஷிமத் நகரம்
News
புதையுறும் ஜோஷிமத் நகரம் ( ட்விட்டர் )

உத்தரகாண்டில் அமைந்திருக்கும் அழகிய நகரம் ஜோஷிமத். இமயமலைக்குச் செல்பவர்களுக்கும், ஆன்மிக சுற்றுலா செல்பவர்களுக்கும் இந்த ஜோஷிமத் நகரம்தான் நுழைவாயிலாக இருக்கிறது. ஜோஷிமத் என்ற மலைநகரமே பூமிக்குள் புதையும் ஆபத்தில் இருக்கிறது. நேற்று ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக 600 வீடுகளிலும், சாலைகளிலும் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர்.

ஜோஷிமத்
ஜோஷிமத்
ட்விட்டர்

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை அங்குள்ள கோயில் ஒன்று இடிந்து விழுந்திருக்கிறது. இதனால் மக்களிடம் பதற்றம் மேலும் அதிகரித்திருக்கிறது. பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் ஆய்வுசெய்ய உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இன்று சென்றிருக்கிறார். மேலும், ஆபத்தான பகுதியிலுள்ள 600 குடும்பங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி, பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கவும், மக்களை வெளியேற்ற ஹெலிகாப்டர்கள், மருத்துவ வசதிகள் தயார் நிலையில் இருக்கவும் உத்தரவிட்டிருக்கிறார்.

அந்தப் பகுதியில் பேரிடர் மேலாண்மைக் கட்டுப்பாட்டு அறை ஒன்று உருவாக்கப்பட்டு, மாநில மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மைப் பணியாளர்கள் போதுமான அளவில் கட்டுப்பாட்டு அறையில் அமர்த்த வேண்டுமெனவும் புஷ்கர் சிங் தாமி தெரிவித்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து, திக்கற்ற மக்கள் பலர் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். 60 குடும்பங்கள் பாதுகாப்பற்றச் சூழல் காரணமாக அப்பகுதியிலிருந்து வேறு பகுதிகளுக்குச் சென்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

புதையுறும் நகரம்
புதையுறும் நகரம்
ட்விட்டர்

அதைத் தொடர்ந்து, வாடியா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹிமாலயன் ஜியாலஜி இயக்குநர் கலாசந்த் சைன், தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "ஜோஷிமத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த பேரிடர் திடீரென ஏற்பட்டதல்ல. அவை நீண்டகாலமாக நிகழ்ந்து வந்ததின் வெளிப்பாடுதான். இதற்கான முக்கியக் காரணிகளில் ஒன்று, இந்த நகரம், ஒரு நூற்றாண்டுக்கு முன்னர், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவின் இடிபாடுகளில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

அதனால், நில அதிர்வு மண்டலம் படிப்படியாக நீர் ஊடுருவலை ஏற்படுத்தியதால் இந்த விரிசல் ஏற்பட்டிருக்கிறது. எனவே, விரைவில் பூகம்பங்கள் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. இந்த நகரம் குறித்து 1886-ம் ஆண்டு இமயமலை கெசட்டியரில் 'நிலச்சரிவின் குப்பைகள் மீதுதான் ஜோஷிமத் அமைந்திருக்கிறது' என முதன்முதலாக அட்கின்ஸ் என்பவர் எழுதியிருக்கிறார். 1976-ல் மிஸ்ரா கமிட்டி கூட தனது அறிக்கையில், 'நிலச்சரிவு ஏற்பட்டு இறுகிய பகுதியில் விடுதிகள், உணவகங்கள் காளான்களைப் போல உருவாகியிருக்கின்றன' எனக் குறிப்பிட்டிருக்கிறது.

புதையுறும் ஜோஷிமத்
புதையுறும் ஜோஷிமத்
ட்விட்டர்

மேலும், மக்கள் தொகையின் அழுத்தம், சுற்றுலாப் பயணிகளின் வருகையும் பன்மடங்கு அதிகரித்ததால் இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம். எனவே, ஜோஷிமத் நகரத்தில் இனி மக்கள் வாழ்வதற்கான வாய்ப்பில்லை. உயிர்கள் விலைமதிப்பற்றவை. அதனால், உடனே மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற வேண்டும்." எனத் தெரிவித்திருக்கிறார்.