உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை ஏழு கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் ரேவா பகுதிக்கு அருகிலுள்ள ஒரு நெடுஞ்சாலையில் டைமருடன் கூடிய ஒரு வெடிகுண்டு கண்டறியப்பட்டுள்ளது. போலீஸாருக்கு இது தொடர்பாகத் தகவல் அளிக்கப்பட்ட நிலையில் ,போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்தனர்.

சமீபத்தில் குடியரசு தினவிழா அன்று பிரதமர் மோடிக்கு பயங்கரவாதிகளால் ஆபத்து இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் நாடு முழுவதும் பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டன. உத்தரப்பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் ,முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு வெடிகுண்டு மிரட்டலுடன் கடிதமும் சேர்ந்து வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் இது குறித்துத் தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.
