Published:Updated:

"எங்கள் அவலநிலையை யாரும் கண்டுகொள்ளவில்லை"-மோடியைக் குறிப்பிட்டு கடிதம் எழுதிவிட்டு விவசாயி தற்கொலை

விவசாயி தற்கொலை

``எங்களிடம் பணம் இல்லை. கடன் தந்தவர்களும் காத்திருக்கtஹ் தயாராக இல்லை. நாங்கள் என்ன செய்வது... எங்களால் வெங்காயத்தைக்கூட சந்தைக்கு எடுத்துச் செல்ல முடியவில்லை." - தற்கொலை செய்துகொண்ட விவசாயி

"எங்கள் அவலநிலையை யாரும் கண்டுகொள்ளவில்லை"-மோடியைக் குறிப்பிட்டு கடிதம் எழுதிவிட்டு விவசாயி தற்கொலை

``எங்களிடம் பணம் இல்லை. கடன் தந்தவர்களும் காத்திருக்கtஹ் தயாராக இல்லை. நாங்கள் என்ன செய்வது... எங்களால் வெங்காயத்தைக்கூட சந்தைக்கு எடுத்துச் செல்ல முடியவில்லை." - தற்கொலை செய்துகொண்ட விவசாயி

Published:Updated:
விவசாயி தற்கொலை

மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் நேற்று 45 வயதான விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு விவசாயி பிரதமர் மோடியைக் குற்றம்சாட்டி எழுதியிருக்கும் கடிதத்தை போலீஸார் கைப்பற்றியிருக்கின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தற்கொலை செய்துகொண்டது புனேவின் ஜூன்னார் வட்டத்துக்குட்பட்ட வட்கவ்ன் அனந்த் கிராமத்தைச் சேர்ந்த தஷ்ரத் லக்ஷ்மண் கேதாரி என்பது தெரியவந்திருக்கிறது. விவசாயியான கேதாரி தன்னுடைய தற்கொலை தொடர்பாக கடிதம் ஒன்றை எழுதியிருந்திருக்கிறார். அதில், பயிர்களுக்கான குறைந்தப்பட்ச ஆதரவு விலை (MSP) கிடைப்பதில்லை என்றும், கடன் வசூலிப்பவர்கள் தன்னைத் துன்புறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும் அந்தக் கடிதத்தில், ``எங்களிடம் பணம் இல்லை. கடன் தந்தவர்களும் காத்திருக்கத் தயாராக இல்லை. நாங்கள் என்ன செய்வது... எங்களால் வெங்காயத்தைக்கூட சந்தைக்கு எடுத்துச் செல்ல முடியவில்லை. மோடி ஜி, நீங்கள் உங்களைப் பற்றி மட்டுமே யோசிக்கிறீர்கள். விளைபொருள்களுக்கு உத்தரவாத விலை தர வேண்டும். உங்களால் விவசாயத்தைச் சரிவரக் கண்காணிக்க முடியவில்லை. விவசாயிகள் என்ன செய்ய இயலும்... கடன் தந்தவர்கள் மிரட்டுகிறார்கள். கூட்டுறவு சங்க அதிகாரிகள் துன்புறுத்துகிறார்கள். எங்களுக்கான நியாயத்தை யாரிடம் கேட்பது... இன்று, உங்களின் இந்தச் செயலற்ற நிலையால் நான் தற்கொலை முடிவை எடுக்கிறேன். பயிர்களுக்கான விலையைத் தாருங்கள், அது எங்கள் உரிமை.

தற்கொலை
தற்கொலை

மகாராஷ்டிரா அரசும், மத்திய அரசும் கோவிட் தொற்று காலத்திலும் கனமழைக் காலத்திலும் விவசாயிகளின் அவலநிலையைக் கண்டுகொள்ளவில்லை. குறைந்தபட்சம் விளைபொருள்களுக்கு உத்தரவாத விலை தர வேண்டும்" என்று கேதாரி குறிப்பிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.