Published:Updated:

போர் விமானத்தை இணைந்து இயக்கிய தந்தை - மகள்... இந்திய விமானப்படை வரலாற்றில் சாதனை!

தந்தை மகள் - சாதனை ( ட்விட்டர் )

இந்தியாவில் விமானப் படையைச் சேர்ந்த தந்தையும் மகளும் ஒன்றாக இணைந்து, போர் விமானத்தை இயக்கி, புதிய வரலாற்றுச் சாதனை படைத்திருக்கின்றனர்.

போர் விமானத்தை இணைந்து இயக்கிய தந்தை - மகள்... இந்திய விமானப்படை வரலாற்றில் சாதனை!

இந்தியாவில் விமானப் படையைச் சேர்ந்த தந்தையும் மகளும் ஒன்றாக இணைந்து, போர் விமானத்தை இயக்கி, புதிய வரலாற்றுச் சாதனை படைத்திருக்கின்றனர்.

Published:Updated:
தந்தை மகள் - சாதனை ( ட்விட்டர் )

ஏர் காம்மொடோர் (Air Commodore) சஞ்சய் ஷர்மா, அதிகாரி அனன்யா ஷர்மா ஆகிய இருவரும் இந்திய விமானப்படையில் அதிகாரிகளாகப் பணிபுரிந்துவருகின்றனர். மே 30, 2022 அன்று, கர்நாடகத்தில் பிடாரில் உள்ள இந்திய விமானப்படை நிலையத்தில் 'ஹாக்-132 போர்' விமானத்தில் இவர்கள் இருவரும் ஒன்றாகப் பறந்தனர். இதுவரை இந்தியாவில் எந்தவொரு தந்தையும், மகளும் ஒன்றாகப் போர் விமானத்தை இயக்கியது கிடையாது எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்திய விமானப்படை வரலாற்றில் தந்தை-மகள் இணைந்து போர் விமானத்தை இயக்கி வரலாறு படைத்துள்ளனர்.

தந்தையும், மகளும் சாதனை
தந்தையும், மகளும் சாதனை
ட்விட்டர்

பிடார் இந்திய விமானப்படை நிலையத்தில் அனன்யா ஷர்மா பயிற்சி பெற்றுவருகிறார். அனன்யா ஷர்மா சிறு வயதிலிருந்தே தன்னுடைய தந்தையின் பணிகளை உன்னிப்பாக கவனித்துவந்தார். இதனால் இந்தத் துறைமீது இவருக்கு அதீத ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. அனன்யா எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பிரிவில் பிடெக் முடித்திருக்கிறார். இவர் 2016-ம் ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்ந்து, கடந்த டிசம்பர் 2021-ல் போர் விமானியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

போர் விமானத்தின் முன் ஏர் காம்மொடோர் ஷர்மா, மகள் அனன்யா ஷர்மா புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!