Published:Updated:

பிரிந்து சென்ற மனைவி; வேலையும் இல்லை! -நிதி நெருக்கடியால் 3 வயது மகனுடன் ரயில் முன் பாய்ந்த தந்தை

தற்கொலை

நிதி நெருக்கடியால் மும்பையில் தந்தை ஒருவர் தனது 3 வயது மகனுடன் தற்கொலைக்காக ரயில் முன்பு பாய்ந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிந்து சென்ற மனைவி; வேலையும் இல்லை! -நிதி நெருக்கடியால் 3 வயது மகனுடன் ரயில் முன் பாய்ந்த தந்தை

நிதி நெருக்கடியால் மும்பையில் தந்தை ஒருவர் தனது 3 வயது மகனுடன் தற்கொலைக்காக ரயில் முன்பு பாய்ந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
தற்கொலை

மும்பை புறநகர் ரயில்களில் தினமும் பலர் அடிபட்டு உயிரிழக்கின்றனர். அவர்களில் பலர் யாரென்றே அடையாளம் தெரியாமல்போய்விடுகிறது. சிலர் விபத்தில் உயிரிழக்கிறார்கள். பலர் குடும்பப் பிரச்னை, நிதி நெருக்கடியால் ரயில்கள் முன்பு பாய்ந்து தற்கொலையும் செய்துகொள்கின்றனர். அது போன்ற ஒரு சம்பவம் இப்போது நடந்துள்ளது. மும்பை நாலாசோபாரா ரயில் நிலையத்துக்கு ராஜு வாக்ளே (32) என்பவர், தன்னுடைய 3 வயது மகனுடன் வந்தார். அவர் ரயில் நிலையத்துக்கு அருகில் தண்டவாளத்தில் மகனை கையில் வைத்துக்கொண்டு நடந்து சென்றார். அந்த நேரத்தில் அந்த வழியாக சர்ச்கேட் செல்லும் புறநகர் ரயில் ஒன்று வந்தது. உடனே ராஜு அந்த ரயில் முன்பு தனது மகனுடன் பாய்ந்துவிட்டார். இதில் ராஜு தூக்கிவீசப்பட்டார். அவரது 3 வயது மகன் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

 ரயில்
ரயில்

ரயில் மோட்டார்மேன் கொடுத்த தகவலின் அடிப்படையில் படுகாயம் அடைந்த ராஜு உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். ரயில்வே போலீஸார் இது குறித்து நடத்திய விசாரணையில் ராஜுவுக்குக் கடந்த பல மாதங்களாக வேலை இல்லை. இதனால் மகனை வைத்துக்கொண்டு குடும்பம் நடத்த மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார். நிதி நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் திண்டாடிய ராஜு, இந்த விபரீத முடிவை எடுத்திருக்கிறார். ஓர் ஆண்டுக்கு முன்பு அவரின் மனைவியும், சண்டையிட்டுக்கொண்டு குஜராத்திலுள்ள தனது சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார். அதிலிருந்து மகனுடன் ராஜு தனியாக வசித்துவந்தார். தற்போது நடந்துள்ள ரயில் விபத்து சம்பவம் குறித்து குஜராத்திலுள்ள ராஜுவின் மனைவிக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் மும்பை வந்திருக்கிறார். தற்போது ராஜு மயக்கநிலையில் இருக்கிறார். அவர் சுயநினைவுக்கு வந்த பிறகு வாக்குமூலம் பெற திட்டமிட்டிருப்பதாக ரயில்வே போலீஸார் தெரிவித்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism