Published:Updated:

உத்தரப்பிரதேசம்: மரத்தடியில் கொரோனா சிகிச்சை; முதியவர் மீது வழக்குப்பதிவு! நடந்தது என்ன?

கொரோனா சிகிச்சை
கொரோனா சிகிச்சை

இச்சம்பவமானது உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள மெவ்லா கோபால்கர் என்றொரு சிறிய கிராமத்தில் அரங்கேறியுள்ளது.

சில தினங்களுக்கு முன், கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் வேப்பமரத்தடியில், மரக்கிளைகளில் குளுக்கோஸ் பாட்டில் தொங்கிக்கொண்டிருக்க, அங்கேயிருந்த கட்டிலில் ஆக்ஸிஜன் உதவியோடு சிகிச்சை எடுக்கும் புகைப்படம் ஒன்று ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. “இங்கே போதுமான அளவிற்கு எங்களுக்கு மருத்துவ வசதிகள் இல்லை. அதனால், எந்தவொரு உதவியுமின்றி இது போன்று தவித்து வருகிறோம். மருத்துவமனைகளில் எங்களுக்கு இடமளிக்க மறுக்கிறார்கள். கிராம நிர்வாகமும் இதை கண்டுகொள்வதில்லை” என்று அப்புகைப்படத்திலிருந்த அம்முதியவர் ஆங்கில ஊடகம் ஒன்றில் குற்றம்சாட்டினார்.இச்சம்பவமானது உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள மெவ்லா கோபால்கர் என்றொரு சிறிய கிராமத்தில் அரங்கேறியுள்ளது. ஹர்வீர் தலன் (65) மற்றும் யோகேஷ் தலன், கிராமத்தின் முன்னாள் தலைவர் ஆகிய இருவரும்தான் இது குறித்து தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, விஷயத்தை நேரில் சென்று ஆய்வு செய்ய பிற ஊடகங்கள் அக்கிராமத்திற்கு படையெடுக்கவே கிராம நிர்வாக அதிகாரிகளிடம் கேட்டறிநத்தில் உண்மை நிலவரமானது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், அங்கு கடந்த 13-ம் தேதிதான் அக்கிராமத்தில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் முதியவரான ஹர்வீர் தலானுக்கு மட்டுமே கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனால், மருத்துவமனைகளில் நிலவி வரும் படுக்கை வசதிகளின் பற்றாக்குறைக்கு மத்தியிலும் அவருக்கு படுக்கை வசதியை ஏற்படுத்திக்கொடுத்து சிகிச்சைப்பெற அறிவுறுத்தியுமே மருத்துவமனைக்குச் செல்ல அவர் மறுத்துவிட்டார். அதனால், அவரே இது போன்ற விபரீத செயல்களை செய்துகொண்டு பொய்யான குற்றச்சாட்டுகளையும் ஊடகங்களிடம் தெரிவித்து வருகிறார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து பொய் குற்றச்சாட்டினை பரப்பியதற்காகவும், அதிகாரிகளின் உத்தரவை மீறியதற்காகவும், நோய் தோற்று அபாயத்தினை ஏற்படுத்தியதற்காகவும் கடந்த திங்கட்கிழமையன்று ஹர்வீர் தலன் மற்றும் யோகேஷ் தலன் மீது மூன்று பதிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு