Published:Updated:

விபரீதத்தில் முடிந்த `fire haircut' - பலத்த தீக்காயங்களுடன் 18 வயது இளைஞன் மருத்துவமனையில் அனுமதி!

fire haircut

``fire haircut-காக எந்த வகையான ரசாயனம் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது." - போலீஸ் அதிகாரி

விபரீதத்தில் முடிந்த `fire haircut' - பலத்த தீக்காயங்களுடன் 18 வயது இளைஞன் மருத்துவமனையில் அனுமதி!

``fire haircut-காக எந்த வகையான ரசாயனம் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது." - போலீஸ் அதிகாரி

Published:Updated:
fire haircut

இன்றைய நவீன காலத்தில், முடிவெட்டும் தொழிலும் காலத்திற்கேற்றவாறு ஸ்மார்ட் ஆகிவிட்டது. இன்னும் சொல்லப்போனால், இன்றைய சூழலில் முடிவெட்டுவதற்கு பெரும்பாலான கடைகளில் கத்தரிக்கோல்கூட இல்லை. அனைத்தும் மெஷின்களில்தான். அதிலும் இப்போது பரவலாக டிரெண்ட் ஆகிவருவது `fire haircut' முறை. அதாவது, இந்த fire haircut முறையில் தலைமுடி மீது ஒருவித ரசாயனம் தடவி, நெருப்பு வைத்து பின்னர் தேவையானபடி முடியைச் சரிசெய்வதாகும்.

fire haircut
fire haircut

இதனைக் கேட்கும்போது ஆபத்தானதாக இருக்குமோ என்று நமக்குத் தோன்றும் கேள்விக்கு, ஆம் இது ஆபத்தானதுதான் என்று உணர்த்துவதைப்போல, குஜராத்தில் நேற்று ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

வல்சாத் மாவட்டத்திலுள்ள வாபி நகர் சலூன் கடையொன்றில் முடிவெட்டுவதற்காக 18 வயது இளைஞன் சென்றிருக்கிறான். அங்கு, முடிவெட்டுபவரால், அந்த இளைஞனுக்கு fire haircut முறையில் சிகையலங்காரம் செய்யும்போது, திடீரென நெருப்பு அந்த இளைஞனின்மேல் பரவிக்கொண்டது. இதில், கழுத்து மற்றும் மார்பில் பலத்த தீக்காயமடைந்த அந்த இளைஞன், அருகிலுள்ள சிவில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

Police
Police
Photo: Vikatan

பின்னர் இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய போலீஸ் அதிகாரி கரம்சிங் மக்வானா, ``இதில் பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தைப் பெற நாங்கள் முயற்சித்துவருகிறோம். fire haircut-காக அவரின் தலையில் ஒருவித ரசாயனம் தடவப்பட்டதால், அந்த நபரின் உடலில் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிகிறது. எனவே fire haircut-காக எந்த வகையான ரசாயனம் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது" எனத் தெரிவித்தார்.