Published:Updated:

`கொரோனா எதிரொலி; 11 வாரங்கள் தள்ளிவைப்பு!’- ஜூலை இறுதியில் இந்தியா வரும் முதல் 4 ரஃபேல் விமானங்கள்

ரஃபேல்
ரஃபேல்

கொரோனாவால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக மே மாதம் இந்தியா வரவிருந்த ரஃபேல் போர் விமானங்களின் வருகை தள்ளிப்போயுள்ளது.

பிரான்ஸிடமிருந்து 63,460 கோடி ரூபாய் செலவில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்குப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது. முதல் விமானத்தை 36 மாதங்களுக்குள்ளும் அனைத்து விமானங்களையும் 67 மாதங்களுக்குள்ளும் தயாரித்து வழங்கப்படும் என இரு நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் போடப்பட்டது. இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் பிரான்ஸில் நடைபெற்ற ரஃபேல் விமானம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல் விமானத்தைப் பெற்றுகொண்டார்.

ரஃபேல்
ரஃபேல்

இந்த விமானம் வழக்கமான நிர்வாக நடைமுறைகள் முடிந்து இந்த ஆண்டு மே மாதம் இந்தியாவுக்குக் கொண்டு வரப்படும் எனக் கூறப்பட்ட நிலையில் கொரோனாவால் இந்தியா மற்றும் பிரான்ஸில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக ரஃபேல் விமானங்களை இந்தியாவுக்குக் கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் இந்த ஆண்டு ஜூலை இறுதியில் 4 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று இரட்டை இருக்கை (TWIN SEATER) விமானம் மற்றும் ஒரு ஒற்றை இருக்கை கொண்ட விமானம் என 4 விமானங்கள் அம்பாலா விமானப்படை தளத்துக்குக் கொண்டுவரப்படுகின்றன.

ரஃபேல் போர் விமானம்... காங்கிரஸ் முதல் பி.ஜே.பி. வரை... நடந்தது என்ன? #AtoZReport

இந்த 4 விமானங்களையும் இந்திய விமானப்படையின் 17-வது கோல்டன் ஆரோஸ் படையின் (No. 17 golden arrows Squadron) கட்டளை அதிகாரி தலைமையிலான விமானிகள், பிரான்ஸ் விமானியுடன் இணைந்து இயக்கவிருக்கின்றனர். ரஃபேல் போர் விமானங்களை இயக்குவதற்காக பிரான்ஸில் சிறப்பு பயிற்சியில் 7 இந்திய விமானிகள் ஈடுபட்டுவரும் நிலையில் மேலும் சில விமானிகள் லாக்டௌன் முடிந்த பிறகு, பிரான்ஸ் சென்று பயிற்சி பெறவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மிகப்பெரிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் முக்கிய பங்கு வகித்த விமானப்படை தலைவர் ஆர்.கே.எஸ்.பதாரியாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ரஃபேல் விமானிகளின் டெயில் நம்பர் எனப்படும் அடையாள எண்கள்`RB' எனத் தொடங்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

ரஃபேல்
ரஃபேல்

பிரான்ஸில் இருந்து மத்திய வளைகுடா நாடுகள் வழியாக இந்த விமானங்கள் இந்தியாவின் அம்பாலா விமானப்படை தளத்துக்கு வருகின்றன. இடையில் வானிலே இருமுறை இந்த விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பப்பட இருக்கின்றன. வளைகுடா நாட்டில் தரையிறங்குவதற்கு முன்பு பிரான்ஸ் நாட்டின் விமானப்படை டாங்கர் மூலமும் மற்றும் வளைகுடா நாட்டிலிருந்து இந்தியா வரும் வழியில் இந்திய விமானப்படையின் இந்தியன் IL-78 டாங்கர் மூலமும் எரிபொருள் நிரப்பப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்திய பாதுகாப்புப்படை அதிகாரிகள், ``இந்த ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படைக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இதன் சக்திக்கும் செயல்திறனுக்கும், சீனா மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தால் நிச்சயம் ஈடுகொடுக்க முடியாது” எனத் தெரிவித்தனர்.

சந்தனப் பொட்டு; டயருக்குக்கீழ் எலுமிச்சை; இந்தியில் `ஓம்' - முதல் ரஃபேல் விமானத்தைப் பெற்ற ராஜ்நாத்!
அடுத்த கட்டுரைக்கு