Published:Updated:

மகாராஷ்டிராவில் குழந்தை உட்பட 7 பேர்; முதன்முறையாக புதிய வகை ஒமிக்ரான் துணை திரிபு தொற்று உறுதி!

ஒமிக்ரான் ( omicron )

துணை திரிபு தொற்றின் மூலம் பாதிக்கப்பட்டவர்களில் நான்கு பேர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், இரண்டு பேர் 20 - 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள். இதில் ஒன்பது வயது குழந்தை ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளார். குழந்தையைத் தவிர மற்ற அனைவரும் கொரனோவுக்கு எதிரான தடுப்பூசியை போட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் குழந்தை உட்பட 7 பேர்; முதன்முறையாக புதிய வகை ஒமிக்ரான் துணை திரிபு தொற்று உறுதி!

துணை திரிபு தொற்றின் மூலம் பாதிக்கப்பட்டவர்களில் நான்கு பேர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், இரண்டு பேர் 20 - 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள். இதில் ஒன்பது வயது குழந்தை ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளார். குழந்தையைத் தவிர மற்ற அனைவரும் கொரனோவுக்கு எதிரான தடுப்பூசியை போட்டுள்ளனர்.

Published:Updated:
ஒமிக்ரான் ( omicron )

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒமிக்ரான் புதிய வகை துணை திரிபு தொற்று ஏழு பேருக்குப் பரவியுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை
breathonix.com

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒமிக்ரானின் புதிய வகை துணை வேரியன்ட்டுகள் ஏழு பேரிடம் கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறையினர் உறுதிசெய்துள்ளனர். இதில் நான்கு நோயாளிகள் ஒமிக்ரானின் பிஏ4 (BA4) துணை திரிபு தொற்றாலும், மூன்று பேர் ஒமிக்ரானின் பிஏ5 (BA5) துணை திரிபு தொற்றாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மகாராஷ்டிரா அரசின் சுகாதார துறையின் மூத்த அதிகாரி கூறுகையில், இந்த வேரியன்ட்டுகள் வீரியம் குறைந்தது என்பதால் பெரிதாக அச்சப்பட தேவையில்லை எனவும், தற்போது பரவியுள்ள இந்த வகை துணை வேரியன்ட்டுகள் ஏற்கெனவே உலகத்தின் சில பகுதிகளில் பரவியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், 'இந்த வேரியன்ட்டுகளின் முழு மரபணு வரிசைமுறை பற்றிய ஆராய்ச்சி அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தால் நடத்தப்பட்டது. ஃபரிதாபாத்தில் உள்ள இந்திய உயிரியல் தரவு மையத்தால் வேரியன்ட்டுகளின் தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது' என்றனர்.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

தொற்றின் மூலம் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் நான்கு நோயாளிகளுக்கு BA4 திரிபின் தொற்று உள்ளது. மற்ற மூன்று பேரும் BA5 திரிபால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் நான்கு பேர் ஆண்கள் மற்றும் மூன்று பேர் பெண்கள். துணை திரிபு தொற்றின் மூலம் பாதிக்கப்பட்டவர்களில் நான்கு பேர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், இரண்டு பேர் 20 - 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள். இதில் ஒன்பது வயது குழந்தை ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளார். குழந்தையைத் தவிர மற்ற அனைவரும் கொரனோவுக்கு எதிரான தடுப்பூசியையும், ஒருவர் பூஸ்டர் டோஸும் போட்டுள்ளார். குழந்தைக்குத் தடுப்பூசி எதுவும் போடப்படவில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism