Published:Updated:

`பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள்!’- நாகாலாந்துப் பெண், மோடிக்கு மெசேஜ்

மிஸ் கொஹீமா - 2019 அழகிப் போட்டியில் இளம்பெண் அளித்த பதில் இணையத்தில் வைரலாகிவருகிறது.

 Vikuonuo Sachu
Vikuonuo Sachu

நாகாலாந்து தலைநகர் கொஹீமாவில், அக்டோபர் 5-ம் தேதி மிஸ் கொஹீமா - 2019 அழகிப்போட்டி நடந்தது. `பெண் கல்வி சமூகத்தை மேம்படுத்துதல்’ என்ற தலைப்பின் கீழ் இந்தப் போட்டி நடத்தப்பட்டது. இதில், Khrienuo Liezietsu மிஸ் கொஹீமா - 2019 பட்டம் வென்றார். இந்தப் போட்டியில் Khrienuo Liezietsu பட்டம் வென்றாலும் சமூக வலைதளத்தில் கவனம்பெற்றது என்னவோ ரன்னர்-அப் வாங்கிய Vikuonuo Sachu தான். கேள்வி-பதில் ரவுண்டில் அவர் அளித்த பதில், தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

கேள்வி-பதில் ரவுண்டில் மிஸ் கொஹீமா - 2019 அழகிப் போட்டியில் பங்கேற்ற போட்டியாளர்கள் அனைவரிடமும் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது, போட்டி நடுவர் ஒருவர் சாசூவிடம், ``நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி உங்களுடன் உரையாட விரும்பினால், அவரிடம் நீங்கள் என்ன சொல்வீர்கள்? எனக் கேள்வி கேட்டார். இதற்குப் பதிலளித்த சாசூ, ``பிரதமர் மோடியுடன் உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தால், மாடுகளுக்குப் பதிலாக பெண்களின்மீது அதிக கவனம் செலுத்துங்கள்” எனக் கூறுவேன் என்றார். அவரின் இந்தப் பதிலைக் கேட்டு அரங்கத்தில் இருந்த அனைவரும் சிரித்தனர். இந்த வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.