Published:Updated:

தண்ணீர் கேட்பது போல நடித்து இளம்பெண்ணின் கன்னத்தில் முத்தமிட்ட டெலிவரி பாய்! - புகாரானதால் கைது

உணவு டெலிவரி

இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து இரண்டு முறை முத்தமிட்ட அவர், ``நான் உனக்கு மாமா போல, எந்த உதவி என்றாலும் என்னிடம் கேட்கலாம்!" எனக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றிருக்கிறார்.

தண்ணீர் கேட்பது போல நடித்து இளம்பெண்ணின் கன்னத்தில் முத்தமிட்ட டெலிவரி பாய்! - புகாரானதால் கைது

இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து இரண்டு முறை முத்தமிட்ட அவர், ``நான் உனக்கு மாமா போல, எந்த உதவி என்றாலும் என்னிடம் கேட்கலாம்!" எனக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றிருக்கிறார்.

Published:Updated:
உணவு டெலிவரி

மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் கல்லூரி ஒன்றில் 19 வயது பெண் ஒருவர் பொறியியல் படிப்பு படித்து வருகிறார். இளம்பெண் அண்மையில் வீட்டில் தனியாக இருந்தபோது பசி ஏற்பட்டதால், பிரபல உணவு டெலிவரி நிறுவனத்தில் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்திருக்கிறார். அந்த ஆர்டரை ரயீஸ் ஷேக் (40) என்பவர் எடுத்திருக்கிறார். உணவகத்துக்குச் சென்று இளம்பெண் ஆர்டர் செய்த உணவை வாங்கியவர், இளம்பெண்ணின் வீட்டுக்கு கொண்டு சென்றிருக்கிறார்.

உணவு டெலிவரி
உணவு டெலிவரி

உணவை இளம்பெண்ணிடம் ஒப்படைத்த டெலிவரி பாய், ``தாகமாக இருக்கிறது, கொஞ்சம் குடிக்க தண்ணீர் கொடுங்கள்" என்று கேட்டிருக்கிறார். அதையடுத்து அந்தப் பெண்ணும் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்திருக்கிறார். அப்போது அவரிடம் பேச்சுக்கொடுத்த அந்த நபர், இளம்பெண் தனியாக இருப்பதை அறிந்து அவரிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றிருக்கிறார். இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து இரண்டு முறை முத்தமிட்ட அவர், ``நான் உனக்கு மாமா போல, எந்த உதவி என்றாலும் என்னிடம் கேட்கலாம்!" எனக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றிருக்கிறார்.

கைது
கைது

ரயீஸ் ஷேக் வீட்டைவிட்டு வெளியேறிய பிறகு, அந்தப் பெண்ணின் வாட்ஸ்அப் எண்ணுக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார். இதனால் ஆத்திரமடைந்த பெண் கோந்த்வா காவல் நிலையத்தில் அந்த நபர்மீது புகாரளித்தார். அதனடிப்படையில் வழக்கு பதிவுசெய்த போலீஸார், அவரைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.