Published:Updated:

முதன்முறையாக `ட்ரோன்' வழியாக தபால்கள் டெலிவரி; அசத்தும் இந்திய அஞ்சல் துறை!

ட்ரோன் வழியாக தபால்கள் டெலிவரி

ட்ரோன், மருந்துகள் அடங்கிய பார்சலை 46 கி.மீ தூரத்தில் உள்ள இடத்திற்கு 30 நிமிடங்களில் கொண்டு சேர்த்தது.

முதன்முறையாக `ட்ரோன்' வழியாக தபால்கள் டெலிவரி; அசத்தும் இந்திய அஞ்சல் துறை!

ட்ரோன், மருந்துகள் அடங்கிய பார்சலை 46 கி.மீ தூரத்தில் உள்ள இடத்திற்கு 30 நிமிடங்களில் கொண்டு சேர்த்தது.

Published:Updated:
ட்ரோன் வழியாக தபால்கள் டெலிவரி

இந்தியாவிலேயே முதன்முறையாக ட்ரோன்கள் பயன்படுத்தி பார்சல்களை டெலிவரி செய்திருக்கிறது இந்திய தபால் துறை. குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் ட்ரோன் மூலம் டெலிவரி செய்யும் திட்டம் சோதனை முயற்சியாக தொலைத்தொடர்பு துறையின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது.

தபால் பணியாளர்கள், ஹபே கிராமத்தில் இருந்து நெர் கிராமத்துக்கு ட்ரோன் மூலம் மருந்துகள் அடங்கிய பார்சலை அனுப்பினர். இரண்டு இடங்களுக்கும் இடையேயான 46 கி.மீ தொலைவை, 25 நிமிடத்தில் கடந்து உரிய இடத்தில் பார்சலை சேர்த்திருக்கிறது ட்ரோன்.

ட்ரோன்கள் பயன்படுத்துவதன் வழியாகத் தபால்களை மிக விரைவாக கொண்டு சேர்க்க முடியும். இந்த சோதனைத் திட்டத்தில் ட்ரோன்கள் மூலம் டெலிவரி செய்யும் போது ஏற்படும் செலவுகள், இரண்டு இடங்களுக்கு இடையேயான புவியியல் அமைப்பு, பணியாளர்களின் ஒருங்கிணைவு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.

ட்ரோன்
ட்ரோன்

தபால் துறையில் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் மிகப் பெரிய பாய்ச்சலாக இருக்கும்.

மாநிலங்களுக்கான தொலைத்தொடர்பு துறை அமைச்சர் தேவுசின் சௌகன் (Devusinh Chauhan), "இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்தது. ட்ரோன், மருந்துகள் அடங்கிய பார்சலை 46 கிஇமீ தூரத்தில் உள்ள இடத்திற்கு 30 நிமிடங்களில் கொண்டு சேர்த்தது" என ட்விட் செய்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் 'Bharat Drone Mahotsav 2022' என்ற பெயரில் நாட்டின் மிகப்பெரிய ட்ரோன் திருவிழாவைத் தொடங்கிவைத்துப் பேசியபோது, விவசாயம், விளையாட்டு, பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மையில் ட்ரோன்களை உபயோகிப்பது அதிகரிக்கும் எனத் தெரிவித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism