Published:Updated:

Petrol Price:`18-வது நாளாக விலையேற்றம்’- டெல்லியில் பெட்ரோலைவிட டீசல் விலை அதிகம்!

பெட்ரோல் பங்க்
பெட்ரோல் பங்க்

தொடர் விலையேற்றத்தால் முதல்முறையாக டெல்லியில் டீசல் பெட்ரோலைவிட அதிக விலைக்கு விற்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகளை நாட்டில் செயல்படும் 7 பொதுத்துறை நிறுவனங்களே நிர்ணயித்து வருகின்றன. தினசரி மாற்றியமைக்கப்படும் விலை காலை 6 மணி முதல் அமல்படுத்தப்படுவது வழக்கம். கொரோனா பொதுமுடக்கம், பொருளாதாரச் சூழல் ஆகியவை காரணமாக கடந்த மார்ச் மாத மத்தியிலிருந்து பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்படாமல் இருந்தது.

பெட்ரோல், டீசல்
பெட்ரோல், டீசல்

கொரோனா பொதுமுடக்கத்தால் பெட்ரோல், டீசல் பயன்பாட்டில் திடீரெனப் பெரும் சரிவு ஏற்பட்ட நிலையில், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்தது. இதையடுத்து, பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரியை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியது. இதனால், விலை குறைந்ததால் ஏற்பட்ட பயனை வாடிக்கையாளர்கள் பெற முடியவில்லை.

E Pass: களத்தில் இறங்கிய ஜூனியர் விகடன்; சிக்கிய போலி E Pass கும்பல்! #VikatanExclusive

82 நாள்களாக மாற்றப்படாத விலை

இந்தநிலையில், தொடர்ந்து 82 நாள்களாக விலை மாற்றம் இல்லாமல் விற்கப்பட்டு வந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலையைப் பொதுத் துறை நிறுவனங்கள் கடந்த 7ம் தேதி முதல் மாற்றியமைக்கத் தொடங்கின. அதன்படி, தொடர்ந்து 18வது நாளாக விலையேற்றப்பட்டதால், தலைநகர் டெல்லியில் முதல்முறையாக பெட்ரோலை விட டீசல் விலை அதிகமாக விற்கப்படுகிறது.

பெட்ரோல் டீசல் விலையுயர்வு
பெட்ரோல் டீசல் விலையுயர்வு
Autocar Professional

டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.79.76 என்ற விலையில் விற்கப்படும் நிலையில், ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.79.88-க்கு விற்கப்படுகிறது. டெல்லியில் பெட்ரோல் விலை முந்தைய நாள் விலையிலிருந்து மாற்றம் எதுவும் இல்லாமல் இருக்கும் நிலையில், டீசல் விலை லிட்டருக்கு 48 பைசாக்கள் இன்று (ஜூன் 24) உயர்த்தப்பட்டது. பெட்ரோல், டீசல் விலை மற்ற மாநிலங்களிலும் அதிகரித்து வரும் நிலையில், பொதுவாக பெட்ரோலுக்கு விதிக்கப்படும் வரியைவிட டீசலுக்குக் குறைவாகவே வரி விதிக்கப்படுவதால், டீசல் விலை பெட்ரோலைவிட எப்போதும் குறைவாகவே இருக்கும்.

பெட்ரோல் விலை தமிழகத்தில் ரூ.80-க்கும் அதிகம்... இது பற்றி மக்கள் கருத்து? #VikatanPollResults

சென்னையில், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.83.04, டீசல் லிட்டருக்கு ரூ.76.77 என்ற நேற்றைய விலையிலேயே விற்பனை ஆகின்றன.

அடுத்த கட்டுரைக்கு