Published:Updated:

`பிட் அடிக்கிறாயா...’ - மாணவியின் ஆடையைக் கழற்றச் சொன்ன ஆசிரியர்... மனமுடைந்து தீக்குளித்த மாணவி!

9-ம் வகுப்பு மாணவி தேர்வில் பிட் அடிப்பதாகச் சந்தேகப்பட்ட ஆசிரியர் ஒருவர், அவரை வற்புறுத்தி ஆடைகளைக் கழற்ற செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

`பிட் அடிக்கிறாயா...’ - மாணவியின் ஆடையைக் கழற்றச் சொன்ன ஆசிரியர்... மனமுடைந்து தீக்குளித்த மாணவி!

9-ம் வகுப்பு மாணவி தேர்வில் பிட் அடிப்பதாகச் சந்தேகப்பட்ட ஆசிரியர் ஒருவர், அவரை வற்புறுத்தி ஆடைகளைக் கழற்ற செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:

ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரிலுள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் தேர்வில் பிட் அடித்ததாக ஆசிரியர் சந்தேகப்பட்டிருக்கிறார். இதையடுத்து, ஆசிரியர் அந்த மாணவியை வற்புறுத்தி, ஆடைகளைக் கழற்றச் சொல்லியிருக்கிறார். இதனால் மனமுடைந்துபோன மாணவி தனக்குத் தானே தீவைத்துக்கொண்டார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், மாணவி போலீஸுக்குக் கொடுத்த வாக்குமூலத்தில், ``நான் தேர்வில் பிட் அடிப்பதற்கான காகிதத்தை என் ஆடையில் மறைத்து வைத்திருப்பதாகச் சந்தேகப்பட்ட ஆசிரியர், என்னைச் சோதனை செய்வதற்காக வகுப்பறையை ஒட்டியிருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றார். நான் அவ்வாறு செய்யவில்லை எனச் சொன்னேன். ஆனால் ஆசிரியர் என்னை அவமானப்படுத்தும்விதமாக, என்னை வற்புறுத்தி ஆடைகளைக் கழற்றச் சொன்னார்'' என்றார்.

தீ
தீ

மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக மாணவியின் தாயார் போலீஸில் புகார் அளித்திருக்கிறார். பள்ளியில் இருந்து வந்த சிறுமி சிறிது நேரத்திலேயே அவமானம் தாங்க முடியாமல் தீக்குளித்ததாக மாணவியின் தாய் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். மாணவி அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவர் ஆபத்தான நிலையில் இருக்கிறார். அந்த ஆசிரியருக்கு எதிராகப் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டுவருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.