Published:Updated:

ஜம்முவில் கைதான தீவிரவாதி பாஜக-வின் மாநில முன்னாள் ஐடி விங் தலைவரா? - அதிர்ச்சித் தகவல்

கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகள் ( ட்விட்டர் )

ஜம்மு காஷ்மீரில் ஆயுதம் ஏந்திய லஷ்கர்-இ-தொய்பா (எல்இடி) தீவிரவாதிகள் இருவர் ஞாயிற்றுக்கிழமை காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஜம்முவில் கைதான தீவிரவாதி பாஜக-வின் மாநில முன்னாள் ஐடி விங் தலைவரா? - அதிர்ச்சித் தகவல்

ஜம்மு காஷ்மீரில் ஆயுதம் ஏந்திய லஷ்கர்-இ-தொய்பா (எல்இடி) தீவிரவாதிகள் இருவர் ஞாயிற்றுக்கிழமை காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Published:Updated:
கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகள் ( ட்விட்டர் )

`ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளைப் பிடிக்க உதவும் கிராமத்துக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும்’ என லெப்டினன்ட் மனோஜ் சின்ஹா அறிவித்திருந்தார். இந்த நிலையில் காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்திலுள்ள துக்சன் தோக் கிராமத்தில் வசிப்பவர்களின் உதவியுடன் புல்வாமாவைச் சேர்ந்த பைசல் அகமது தார், ராஜாவுரியைச் சேர்ந்த தாலிப் ஹுசைன் ஆகிய இரு தீவிரவாதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து இரண்டு ஏ.கே ரக துப்பாக்கிகள், ஏழு கையெறி குண்டுகள், ஒரு கைத்துப்பாக்கி ஆகியவற்றை காவல்துறை மீட்டிருக்கிறது.

ஜம்மு - காஷ்மீர்
ஜம்மு - காஷ்மீர்
ட்விட்டர்

இந்தக் கைது நடவடிக்கை தொடர்பாக மனோஜ் சின்ஹா கூறுகையில், ``மிகவும் தேடப்பட்டுவரும் இரண்டு தீவிரவாதிகளைக் கைதுசெய்வதில் மிகுந்த தைரியத்தையும் துணிச்சலையும் வெளிப்படுத்திய துக்சன் தோக் கிராமவாசிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு யூனியன் பிரதேச அரசின் மூலம் வழங்கப்படும். கிராமவாசிகளின் துணிச்சலுக்கு நான் தலை வணங்குகிறேன். இத்தகைய உறுதியான துணிச்சல் தீவிரவாதத்தின் முடிவு வெகுதொலைவில் இல்லை என்பதைக் காட்டுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இரண்டு தீவிரவாதிகளில், ஹுசைன் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட தீவிரவாதி காசிமுடன் தொடர்ந்து தொடர்பிலிருந்தார், மேலும் ரஜோரி மாவட்டத்தில் குறைந்தது மூன்று குண்டுவெடிப்பு வழக்குகளில் ஈடுபட்டிருக்கிறார். மேலும், கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவரான தலிப் ஹுசைன், பா.ஜ.க-வில் இணைந்ததாகக் கூறப்படுகிறது.

பாஜக நிர்வாகி இர்ஷத்துடன் ரியாஸ் அட்டாரி
பாஜக நிர்வாகி இர்ஷத்துடன் ரியாஸ் அட்டாரி

ஜம்மு மாகாணத்தின் சிறுபான்மை மோர்ச்சாவின் ஐடி மற்றும் சமூக ஊடகப் பிரிவின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், தாலிப் ஹுசைன் 18 நாள்கள் மட்டுமே கட்சியில் உறுப்பினராக இருந்தார். மே 27, 2022 அன்று ராஜினாமா செய்துவிட்டார் என்று பா.ஜ.க தரப்பு விளக்கமளித்திருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.

அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பதானியா இது குறித்துப் பேசுகையில், ``ஆன்லைன் வழியே யார் வேண்டுமென்றாலும் கட்சியில் சேரலாம் என்பதால் இதுபோல் நிகழ்ந்திருக்கிறது. இது மோசமானதுதான். ஆன்லைன் வழியே உறுப்பினர்கள் இணையும்போது அவர்களின் குற்றப் பின்னணி குறித்து ஆராய முடியாமல் போய்விடுகிறது” என்றார்.

ஏற்கெனவே உதய்பூர் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு பா.ஜ.க-வுடன் தொடர்பு இருப்பது போன்று வெளியான தகவல்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்தச் சம்பவம் பரபரப்பாகியிருக்கிறது.