Published:Updated:

ரத்தன் டாடாவின் புதிய முதலீடு; முதியோர்களைப் பார்த்துக்கொள்ள படித்த இளைஞர்கள் சம்பளத்துடன் நியமனம்!

ரத்தன் டாடா

படித்த இளைஞர்களை நியமனம் செய்து வயதான முதியவர்களைப் பார்த்துக்கொள்ளும் 'Good Fellows' என்ற நிறுவனத்தில் ரத்தன் டாடா முதலீடு செய்துள்ளார். "இது இளம் குழுவினரின் வளர்ச்சிக்கு உதவும் என்று நம்புகிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

ரத்தன் டாடாவின் புதிய முதலீடு; முதியோர்களைப் பார்த்துக்கொள்ள படித்த இளைஞர்கள் சம்பளத்துடன் நியமனம்!

படித்த இளைஞர்களை நியமனம் செய்து வயதான முதியவர்களைப் பார்த்துக்கொள்ளும் 'Good Fellows' என்ற நிறுவனத்தில் ரத்தன் டாடா முதலீடு செய்துள்ளார். "இது இளம் குழுவினரின் வளர்ச்சிக்கு உதவும் என்று நம்புகிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

Published:Updated:
ரத்தன் டாடா

28 வயதாகும் ஷாந்தனு, அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்தவர். ஷாந்தனுவின் அப்பா, தாத்தா என இவருடைய நான்கு தலைமுறைகளும் டாடா குழுமத்தில் பணியாற்றியவர்கள். இதைத்தொடர்ந்து ஐந்தாவது தலைமுறையாக டாடா குழுமத்திலிருக்கும் ஷாந்தனு தற்போது, ரத்தன் டாடாவின் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

எப்போதும் ரத்தன் டாடாவுடன் இணைந்து பயணிக்கும் இளைஞரான ஷாந்தனு, ரத்தன் டாடா தெரு நாய்களை மீது அதீத அன்பு கொண்டவர் என்று கூறி 2015-ம் ஆண்டு தெரு நாய்களை வாகன விபத்திலிருந்து பாதுகாக்க 'Motopaws' என்ற நிறுவனத்தை புனேவில் தொடங்கினர். இதையடுத்து தற்போது முதியவர்கள் தங்கள் இறுதிக்கால வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ 'Good Fellows' என்ற நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.

ஷாந்தனு, ரத்தன் டாடா
ஷாந்தனு, ரத்தன் டாடா

நாடு முழுவதும் ஏராளமான வயதான முதியவர்கள் தங்கள் இறுதிக் கால வாழ்க்கையில் தங்களுடைய குடும்பங்களைப் பிரிந்து தனியாக வாழ்கிறார்கள். இப்படி வாழும் முதியவர்கள் பலர் பேசுவதற்குக் கூட யாரும் இல்லாமல் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படுகிறார்கள். எனவே இவர்களின் தனிமையைப் போக்கும் விதமாக வயதான முதியவர்களைப் பார்த்துக்கொள்ள நன்கு படித்த இளைஞர்களை ஊதியத்துடன் பணி நியமனம் செய்கிறது இந்த நிறுவனம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இப்படிப் பணி நியமனம் செய்யப்படும் இளைஞர்களுக்கு 'Good Fellows' என்று பெயர். இந்த இளைஞர்கள் முதியவர்களுடன் சேர்ந்து திரைப்படங்கள் பார்ப்பது, உரையாடுவது, நடைப்பயிற்சி செல்வது, அவர்களின் வேலைகளில் உதவுவது என அவர்களுடன் ஆறுதலாக இருப்பார்கள்.

முதியவர் ஒருவருடன் நேரம் செலவழிக்கும் GoodFellows
முதியவர் ஒருவருடன் நேரம் செலவழிக்கும் GoodFellows

இந்த 'Good Fellows' நிறுவனத்தில் பங்கேற்க விரும்பும் முதியவர்கள் மாதாந்திர கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இதன் கட்டணம் குறைவுதான் என்று கூறப்படுகிறது. கூடுதல் சிறப்பாக, இதற்கு முதல் மாதம் கட்டணம் எதுவும் இல்லை. எனவே முதல் மாதம் சேர்ந்து எப்படி இருக்கிறது என்று பார்த்துவிட்டு பிறகு இதைத் தொடரலாம் என்று கூறுகிறார்கள். இந்த முயற்சி இளைஞர்கள் முதியவர்கள் என இரண்டு தலைமுறைகளை இணைக்கும் பாலமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் எந்தவொரு ஆக்கப்பூர்வமான புது முயற்சிகளையும் வரவேற்கும் ரத்தன் டாடா, இளைஞர்களையும் முதியவர்களையும் இணைக்கும் இந்த 'Good Fellows' நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.

இதுபற்றிக் கூறிய ரத்தன் டாடா, "நீங்கள் ஒருவரின் துணைக்காக ஆறுதலாக அவர்களுடன் நேரத்தைச் செலவிடும்போதுதான் 'தனிமை என்றால் என்ன?' என்று உங்களுக்குப் புரியும். இந்த 'Good Fellows' நிறுவனம் இரண்டு தலைமுறைகளை இணைக்கும் பாலமாகச் செயல்படுகிறது. இப்போது இது மிகவும் முக்கியமானது என்று கருதுகிறேன். இது இந்தியாவில் ஒரு முக்கியமான சமூகப் பிரச்னையைத் தீர்க்க உதவும். மேலும், இந்த முதலீடு 'Good Fellows' நிறுவனத்திலுள்ள இளம் குழுவினரின் வளர்ச்சிக்கு உதவும் என்று நம்புகிறேன்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.