Published:Updated:

நள்ளிரவு நேரம்; அதிவேகமாக வந்த லாரி - சாலை தடுப்பில் உறங்கிக்கொண்டிருந்தவர்களுக்கு நேர்ந்த சோகம்!

டெல்லியில் சாலை விபத்து ( ட்விட்டர் )

அதிவேகமாக வந்த லாரி ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவர்மீது தூங்கிக் கொண்டிருந்தவர்கள்மீது மோதியது.

நள்ளிரவு நேரம்; அதிவேகமாக வந்த லாரி - சாலை தடுப்பில் உறங்கிக்கொண்டிருந்தவர்களுக்கு நேர்ந்த சோகம்!

அதிவேகமாக வந்த லாரி ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவர்மீது தூங்கிக் கொண்டிருந்தவர்கள்மீது மோதியது.

Published:Updated:
டெல்லியில் சாலை விபத்து ( ட்விட்டர் )

தலைநகர் டெல்லியின் சீமாபுரி பகுதியில் சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவர்மீது சிலர் உறங்கிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், நேற்று நள்ளிரவு 1:51 மணியளவில் அந்த வழியாக அதிவேகமாக வந்த லாரி ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவர்மீது தூங்கிக் கொண்டிருந்தவர்கள்மீது மோதியது. அதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

சாலை விபத்து
சாலை விபத்து
ட்விட்டர்

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவரும் போலீஸார், ``இந்த சாலை விபத்தில் கரீம் (52), சோட்டே கான்ஸ் (25), ஷா ஆலம் (38), ராகுல் (45) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் மணிஷ் (16), பிரதீப் (30) ஆகியோர் காயமடைந்தனர். சம்பந்தப்பட்ட வாகனத்தை கண்டுபிடிக்க பல குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் உரிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகிறோம். இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றன'' எனத் தெரிவித்தனர்.