Published:Updated:

மகாராஷ்டிரா: அமைச்சர் பதவி நிச்சயம்... பாஜக எம்.எல்.ஏ-விடம் ரூ.100 கோடிக்குப் பேரம் பேசிய கும்பல்

சித்திரிப்புப் படம்

மகாராஷ்டிராவில் அமைச்சர் பதவியை ரூ.100 கோடிக்கு விற்பனை செய்ய முயன்ற 4 பேர் கொண்ட கும்பல் கைதுசெய்யப்பட்டிருக்கிறது.

மகாராஷ்டிரா: அமைச்சர் பதவி நிச்சயம்... பாஜக எம்.எல்.ஏ-விடம் ரூ.100 கோடிக்குப் பேரம் பேசிய கும்பல்

மகாராஷ்டிராவில் அமைச்சர் பதவியை ரூ.100 கோடிக்கு விற்பனை செய்ய முயன்ற 4 பேர் கொண்ட கும்பல் கைதுசெய்யப்பட்டிருக்கிறது.

Published:Updated:
சித்திரிப்புப் படம்

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான புதிய அரசு இந்த மாதத் தொடக்கத்தில் பதவியேற்றிருக்கிறது. ஆனால் இன்னும் அமைச்சர்கள் பதவியேற்கவில்லை. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு 15 அமைச்சர் பதவிகள் கிடைக்கவிருக்கின்றன. பாஜக-வுக்கு 28 அமைச்சர் பதவிகள் கிடைக்கவிருக்கின்றன என்ற தகவல் வெளியாக, அமைச்சர் பதவியைப் பெற எம்.எல்.ஏ-க்களிடையே கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஒரு கும்பல் எம்.எல்.ஏ-க்களை அமைச்சர் ஆசைகாட்டி ஏமாற்ற முயன்றிருக்கிறது.

மகாராஷ்டிரா சட்டமன்றம்
மகாராஷ்டிரா சட்டமன்றம்

புனே அருகிலுள்ள தவுண்ட் தொகுதி பாஜக எம்.எல்.ஏ ராகுல் என்பவரின் உதவியாளர் பாலகிருஷ்ணாவுக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து, தான் ரியாஷ் ஷேக் என்றும், தனக்கு டெல்லியில் நல்ல செல்வாக்கு இருப்பதால் அமைச்சர் பதவி பெற்றுத்தர முடியும் என்று தெரிவித்திருக்கிறார். இது குறித்து எம்.எல்.ஏ-வைச் சந்தித்துப் பேச வேண்டும் என்றும் தெரிவித்தார். உடனே மும்பை நரிமன் பாயின்ட்டிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ராகுலும், ரியாஷ் ஷேக்கும் சந்தித்துப் பேசினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தனக்கு பாஜக மூத்த தலைவர்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு இருக்கிறது என்றும், தன்னால் நிச்சயம் அமைச்சர் பதவியை பெற்றுக்கொடுக்க முடியும் என்று தெரிவித்தார். ரூ.100 கோடி அதற்குச் செலவாகும் என்றும் தெரிவித்தார். பேரம் பேசப்பட்டு இந்தத் தொகை 90 கோடியாகக் குறைக்கப்பட்டது. இதையடுத்து அடுத்த முறை சந்திக்கும்போது முதற்கட்டமாக 20 சதவிகித தொகையைத் தருவதாக பாஜக எம்.எல்.ஏ தெரிவித்தார். பின்னர் இது குறித்து எம்.எல்.ஏ ராகுல் கட்சித் தலைவர்களிடம் தெரிவித்தார். அவர்களின் ஆலோசனையின் பேரில் இது குறித்து போலீஸில் புகார் செய்தார். இது குறித்த விசாரணை குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பாஜக
பாஜக

எம்.எல்.ஏ பணம் தயாராக இருப்பதாகக் கூறி, ரியாஷ் ஷேக்குக்கு போன் செய்தார். ரியாஷும் அவருடைய கூட்டாளிகளும் பணத்தை வாங்க ஹோட்டலுக்கு வந்தபோது மறைந்திருந்த போலீஸார் அவர்களை மடக்கிப் பிடித்து கைதுசெய்தனர். ரியாஷ் தவிர யோகேஷ் குல்கர்னி, சாகர் சங்வி, ஜாபர் உஸ்மான் ஆகியோரும் கைதுசெய்யப்பட்டனர். இதில் ஜாபர் உஸ்மான் மூளையாகச் செயல்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தங்களது காவலில் எடுத்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.