Published:Updated:

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்தைப் பிடித்த கவுதம் அதானி! சொத்து மதிப்பு இதுதான்!

கவுதம் அதானி ( Aijaz Rahi )

உலக பணக்காரர்கள் பட்டியலில் 4வது இடத்தில் இருந்த கவுதம் அதானி பிரான்சின் பெர்னார்ட் அர்னால்ட்டை பின்னுக்குத் தள்ளி உலகின் மூன்றாவது பெரிய பணக்காரர் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்.

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்தைப் பிடித்த கவுதம் அதானி! சொத்து மதிப்பு இதுதான்!

உலக பணக்காரர்கள் பட்டியலில் 4வது இடத்தில் இருந்த கவுதம் அதானி பிரான்சின் பெர்னார்ட் அர்னால்ட்டை பின்னுக்குத் தள்ளி உலகின் மூன்றாவது பெரிய பணக்காரர் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்.

Published:Updated:
கவுதம் அதானி ( Aijaz Rahi )

மின்சாரம், துறைமுகம், விமான நிலையம், என்று பல்வேறு தொழில்களை நடத்துகிற இந்தியாவின் முன்னிணி தொழிலதிபர் கவுதம் அதானி. கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ரிலையன்ஸ் குழுமத்தின் முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி அதானி முதலிடத்தைப் பிடித்தார். அதே போன்று உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 10வது இடத்தில் இருந்த அதானி படிப்படியாக முன்னேறி கடந்த ஜூலை மாதம் பில் கேட்ஸை பின்னுக்குத் தள்ளி 4வது இடத்திற்கு வந்தார். இந்நிலையில் தற்போது பிரபல ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் இந்திய பணக்காரரான கௌதம் அதானி 137.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறார்.

கவுதம் அதானி
கவுதம் அதானி

உலக பணக்காரர்கள் பட்டியலில் 4வது இடத்தில் இருந்த கவுதம் அதானி பிரான்சின் பெர்னார்ட் அர்னால்ட்டை பின்னுக்குத் தள்ளி தற்போது உலகின் மூன்றாவது பணக்காராகியிருக்கிறார். ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் பட்டியலில் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் முதல் மூன்று இடங்களுக்குள் நுழைவது இதுவே முதல் முறை. தற்போதைய நிலவரப்படி டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் முதல் இடத்திலும் , அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் இரண்டாவது இடத்திலும், மூன்றாவது இடத்தில் அதானியும், 4 வது இடத்தில் பெர்னார்ட்டும் 5வது இடத்தில் பில் கேட்ஸ்ஸும் அப்பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். கவுதம் அதானி தனது 60வது பிறந்தநாளில் 60,000 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.