Published:Updated:

``அதைச் செய்யாதிருந்தால் அன்று இறந்திருப்பேன்!" - தாஜ் ஹோட்டல் தாக்குதலில் சிக்கியதை விவரித்த அதானி

கெளதம் அதானி
News
கெளதம் அதானி

உலகின் மூன்றாவது மிகப்பெரிய பணக்காரரான இந்தியாவைச் சேர்ந்த கௌதம் அதானி, தாஜ் ஹோட்டல் தாக்குதலின்போது அங்கிருந்து தான் தப்பித்தது குறித்து விவரித்திருக்கிறார்.

``அதைச் செய்யாதிருந்தால் அன்று இறந்திருப்பேன்!" - தாஜ் ஹோட்டல் தாக்குதலில் சிக்கியதை விவரித்த அதானி

உலகின் மூன்றாவது மிகப்பெரிய பணக்காரரான இந்தியாவைச் சேர்ந்த கௌதம் அதானி, தாஜ் ஹோட்டல் தாக்குதலின்போது அங்கிருந்து தான் தப்பித்தது குறித்து விவரித்திருக்கிறார்.

Published:Updated:
கெளதம் அதானி
News
கெளதம் அதானி

2008-ல் இந்தியாவில் நடந்த மிகப்பெரிய சம்பவம், மும்பை தாஜ் ஹோட்டலில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய அதிபயங்கர தாக்குதல். நவம்பர் 26-ல் நடந்த இந்தச் சம்பவத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த 10 தீவிரவாதிகள் தாஜ் ஹோட்டல், டிரிடெண்ட் ஹோட்டல், சி.எஸ்.டி ரயில் நிலையம், காமா மருத்துவமனை, யூதர்களின் வழிபாட்டுத்தலம் போன்ற இடங்களில் கண்ணில்படுபவர்களையெல்லாம் சரமாரியாகச் சுட்டுக்கொன்றனர்.

தீப்பற்றி எரியும் தாஜ் ஹோட்டல்
தீப்பற்றி எரியும் தாஜ் ஹோட்டல்

10 தீவிரவாதிகளுடன் மூன்று நாள்கள் போராடிய மும்பை போலீஸார், ஒன்பது பேரைச் சுட்டுக்கொன்று அஜ்மல் கசாப் என்பவரை உயிருடன் மீட்டனர். பின்னர் அந்த நபரும் தூக்கிலிடப்பட்டார். இந்த நிலையில், உலகின் மூன்றாவது பணக்காரரான இந்தியாவைச் சேர்ந்த கௌதம் அதானி, தாஜ் ஹோட்டல் தாக்குதலின்போது அங்கிருந்து தான் தப்பித்தது குறித்து விவரித்திருக்கிறார்.

டிவி நிகழ்ச்சியொன்றில் பேசிய அதானி, ``துபாயிலிருந்து மும்பை வந்த என் நண்பர்களுடன் ஒரு சந்திப்பை முடித்திருந்தேன். பில்களைச் செலுத்திய பின்னர் ஹோட்டலைவிட்டு வெளியேற நான் தயாராக இருந்தபோது, என் நண்பர்கள் சிலர் என்னை மீண்டும் ஒரு கூட்டத்தை நடத்தச் சொன்னார்கள். பின்னர் அங்கேயே தங்க முடிவுசெய்தோம். அதைத் தொடர்ந்து, ஒரு கோப்பை காபியுடன் மீண்டும் நாங்கள் கூட்டத்தைத் தொடங்கினோம்.

கெளதம் அதானி
கெளதம் அதானி

அப்போது ஹோட்டல் தாக்குதலுக்குள்ளானதை அறிந்தேன். சில நிமிடங்களில் பின்கதவு வழியாக ஹோட்டல் ஊழியர்கள் என்னைப் பாதுகாப்பாகச் சமையலறைக்கு அழைத்துச் சென்றனர். அடுத்தநாள் காலை 7:30 மணியளவில் கமாண்டோக்களால் முழு பாதுகாப்புடன் மீட்கப்பட்டோம். பிறகு, நான் நினைத்திருக்கிறேன், அன்று கூட்டத்தில் கலந்துகொள்ளாமலிருந்திருந்தால், பால்கனியில் நான் சுற்றிக்கொண்டிருந்திருக்கலாம். ஒருவேளை அது எனக்கு மரணத்தை ஏற்படுத்தியிருக்கலாம்" என்று கூறினார்.