Published:Updated:

`நாங்கள் இனி தம்பதி!' - 8 ஆண்டு ஆண் நண்பர்கள் ஐதராபாத்தில் மோதிரம் மாற்றி திருமணம்

திருமணக் கோலத்தில் தம்பதி
News
திருமணக் கோலத்தில் தம்பதி

இத்திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பஞ்சாப் மற்றும் பெங்கால் முறைப்படி திருமணம் நடந்தது. இவர்கள் திருமணத்தை ஐதராபாத்தை சேர்ந்த திருநங்கை ஷோபியா டேவிட் நடத்தி வைத்தார். இத்திருமணத்தின் மூலம் இருவரும் கணவன் - கணவனாக உறவில் இணைந்துள்ளனர்.

இந்தியச் சட்டம் தன்பாலின திருமணத்திற்கு இன்னும் அங்கீகாரம் கொடுக்காவிட்டாலும், ஆங்காங்கே அவை நடந்து வருகின்றன. அந்த வகையில், ஐதராபாத்தில் ஒரு திருமணம் நடந்துள்ளது.

கொல்கத்தாவில் உள்ள பிரபல ஹோட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் உயர் அதிகாரியாகப் பணியாற்றும் சுப்ரியா சக்ரவர்த்தியும், டெல்லியில் உள்ள சர்வதேச நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் அபய் டாங்க் என்பவரும் ஆரம்பத்தில் நண்பர்களாகப் பழகினர். கடந்த 8 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொண்டனர். ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்திருக்க முடியாது என்ற நிலைக்கு வந்தனர்.

கையில் மருதானியுடன் தம்பதி
கையில் மருதானியுடன் தம்பதி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

எனவே முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழலாம் என்ற முடிவுக்கு வந்தனர். ஆனால் இதற்கு இரு வீட்டிலும் எதிர்ப்புக் கிளம்பியது. இருவரும் வேறு வேறு பெண்களை திருமணம் செய்து கொண்டு வாழும்படி பெற்றோர்கள் நிர்பந்தம் செய்தனர். ஆனால் அதற்கு இவர்கள் இசையவில்லை.

இந்நிலையில், இருவரும் ஐதராபாத் புறநகரில் இருக்கும் ரிசார்ட் ஒன்றில் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இத்திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பஞ்சாப் மற்றும் பெங்கால் முறைப்படி திருமணம் நடந்தது. இவர்கள் திருமணத்தை ஐதராபாத்தை சேர்ந்த திருநங்கை ஷோபியா டேவிட் நடத்தி வைத்தார். இத்திருமணத்தின் மூலம் இருவரும் கணவன் - கணவனாக உறவில் இணைந்துள்ளனர்.

திருமணக் கோலத்தில் தம்பதி
திருமணக் கோலத்தில் தம்பதி

இத்திருமணத்தில் கலந்து கொண்ட மூத்த பத்திரிகையாளர் கிங்ஷெக் நாக் திருமண நிகழ்ச்சிகள் குறித்து கூறுகையில், ``ஒரு வித்தியாசமான மாலைப் பொழுதாக அமைந்தது. திருமணத்தில் மணமக்கள் இருவரின் பெற்றோர்கள் மற்றும் ஏராளமான நண்பர்கள் கலந்து கொண்டதை பார்க்கும் போது, இந்தியா ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்து மனமாற்றம் பெற்று வருவதைக் காட்டுகிறது" என்று வரவேற்றார்.