Published:Updated:

ராணுவக் குடும்பம்; தந்தை பணியாற்றிய அதே பிரிவு... முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் பின்னணி!

 பிபின் ராவத்
News
பிபின் ராவத்

குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில், பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளானது. கோவை சூலூர் விமானப்படைத் தளத்திலிருந்து குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்துக்குச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மரணமடைந்தார். குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் வானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. கோவை சூலூர் விமானப்படைத் தளத்திலிருந்து குன்னூர் வெலிங்டன் ராணுவப் பயிற்சி மையத்துக்குச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

ஹெலிகாப்டர்  விபத்து
ஹெலிகாப்டர் விபத்து

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி எரிந்து விழுந்ததில், அதில் பயணித்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், உடல்கள் முழுவதும் எரிந்த நிலையில் மற்றவர்களும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

யார் இந்த பிபின் ராவத்?

2016-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 31-ம் தேதியன்று, இந்திய ராணுவத்தின் 27-வது தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார் பிபின் ராவத். தலைமைத் தளபதியாகப் பதவியேற்பதற்கு முன்பு, துணைத் தலைமைத் தளபதியாகப் பணியாற்றிவந்தார்.

பிபின் ராவத்
பிபின் ராவத்

குடும்பம், படிப்பு:

உத்தராகாண்ட்டில் பிறந்த பிபின் ராவத்தின் குடும்பம், பல தலைமுறைகளாகத் தொடர்ந்து ராணுவத்தில் பணியாற்றுகிறது. ஜெனரல் பிபின் ராவத், சிம்லாவில் உள்ள செயின்ட் எட்வார்ட் பள்ளியில் படித்தார். அதன் பின்னர் டேஹ்ராடூனிலும், தமிழகத்தின் வெலிங்டனில் உள்ள பாதுகாப்புச் சேவை உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தார். பின்னர், தேசிய பாதுகாப்புக் கல்லூரியிலும் பல்வேறு பிரிவுகளில் தேர்ச்சிபெற்றார்.

பிரதமர் மோடி, பிபின் ராவத்
பிரதமர் மோடி, பிபின் ராவத்

மேலும், அமெரிக்காவின் ஃபோர்ட்லீவன்வொர்த்தில் உள்ள ராணுவத் தளபதிகளுக்கான பயிற்சி வகுப்புகளிலும் பிபின் ராவத் பங்கெடுத்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சென்னைப் பல்கலைகழகத்தில் பாதுகாப்பு குறித்த படிப்பில் அவருக்கு எம்.பில் பட்டம் வழங்கப்பட்டது. மேலாண்மை மற்றும் கணினி அறிவியலில் பட்டயப்படிப்பை முடித்திருக்கிறார். ராணுவப் போர்த்திறன் குறித்த தனது ஆய்வுக்காக, கடந்த 2011-ம் ஆண்டு, மீரட்டிலுள்ள சௌத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார் பிபின்.

பிபின் ராவத்
பிபின் ராவத்

ராணுவப் பணி:

1978-ம் ஆண்டு, டிசம்பர் மாதம், தனது தந்தை பணியாற்றிய பதினோராவது கூர்கா ரைஃபிள்ஸ் பிரிவின் ஐந்தாவது படையணியில் சேர்ந்தார். தொடர்ந்து, டேராடூனிலுள்ள இந்திய ராணுவப் பயிற்சி நிலையத்தில் இந்திய ராணுவ இயக்குநரகத்தின் தலைமை அதிகாரி உட்பட பயிற்சி அளிக்கும் பொறுப்பை வகித்தார். மத்திய பிராந்தியத்தில் தளவாடங்கள் பிரிவு அலுவலராகவும் பிபின் ராவத் பணியாற்றியிருக்கிறார். மேலும், ராணுவச் செயலர் பிரிவில், துணை ராணுவச் செயலாளர் மற்றும் கர்னல் அந்தஸ்தில் ராணுவச் செயலாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.

பிபின் ராவத்
பிபின் ராவத்

உயர்ந்த மலைகளின்மீது போர் புரிதலிலும், ஆட்சிக்கு எதிரான ஆயுதக்குழுக்களை ஒடுக்குவதிலும் கைதேர்ந்தவராகச் செயல்பட்டார். நாடு முழுவதும் பல்வேறு ராணுவப்படைகளுக்குத் தலைமை தாங்கியதோடு, ராணுவம் குறித்த கல்வியில் ஆர்வம் கொண்டிருந்தார்.

பிபின் ராவத்
பிபின் ராவத்

2008-ம் ஆண்டு, காங்கோ நாட்டுக்கு ஐக்கிய நாடுகள் சார்பாக அனுப்பப்பட்ட அமைதிக்குழுவில், இந்தியாவின் பிரதிநிதிகளுள் ஒருவராகச் சென்றார். அவரது தலைமையின் கீழ் அமைதிக்குழு மிகச் சிறப்பாகச் செயல்பட்டதாகவும், அதுவரை அமைதியாக இருந்த இந்தியாவின் அணுகுமுறை, அவரின் தலைமைக்குப் பிறகு இரும்புக்கரம் கொண்டதாக மாறியதாகவும் அந்த அமைதிக்குழுவில் இருந்தவர்கள் அவரைப் பற்றி கருத்து தெரிவிக்கின்றனர்.