Published:Updated:

"தேசியக் கொடி ஏற்றாத வீடுகளைப் புகைப்படம் எடுத்து என்னிடம் கொடுங்கள்!"- பா.ஜ.க தலைவர் சர்ச்சை பேச்சு

மகேந்திர பட்

"தேசியக் கொடியை ஏற்றாத வீடுகளின் புகைப்படங்களை எடுத்து என்னிடம் கொடுங்கள்" என்று உத்தராகண்ட் மாநில பா.ஜ.க தலைவர் கூறியிருப்பது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

"தேசியக் கொடி ஏற்றாத வீடுகளைப் புகைப்படம் எடுத்து என்னிடம் கொடுங்கள்!"- பா.ஜ.க தலைவர் சர்ச்சை பேச்சு

"தேசியக் கொடியை ஏற்றாத வீடுகளின் புகைப்படங்களை எடுத்து என்னிடம் கொடுங்கள்" என்று உத்தராகண்ட் மாநில பா.ஜ.க தலைவர் கூறியிருப்பது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

Published:Updated:
மகேந்திர பட்

இந்தியா 75-வது சுதந்திர ஆண்டில் இருக்கிறது. இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் உத்தராகண்ட் மாநில பா.ஜ.க தலைவர் மகேந்திர பட் கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 10) 75வது சுதந்திர தினத்தைக் குறிக்கும் வகையில், தேசியக் கொடிகளை ஏற்றப்படாத வீடுகளுக்குச் சென்று அந்த வீட்டின் புகைப்படங்களை எடுத்து தன்னிடம் கொடுக்குமாறு தனது ஆதரவர்களுக்குக் கூறியிருப்பது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி 'Har Ghar Tiranga' (ஒவ்வொரு வீட்டிலும் மூவண்ணக் கொடி) என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ், ஆகஸ்ட் 13 முதல் 15 வரை ஒவ்வொரு வீட்டிலும் மூவண்ணக் கொடியைப் பறக்கவிடவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

இதன் மூலம் மூவண்ணக் கொடியுடன் குடிமக்களின் உறவு ஆழமடையும் என்றும் இது குடிமக்கள் மத்தியில் தேசபக்தி உணர்வை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து மூவண்ண தேசியக்கொடியை ஏற்றாதவர்களை இந்தியா நம்பாது என்றும், அந்த வீடுகளின் உரிமையாளர்களை மக்கள் நம்பிக்கையுடன் பார்க்க மாட்டார்கள் என்றும் மகேந்திர பட் தெரிவித்தது மட்டுமன்றி, அந்த வீடுகளின் புகைப்படங்களை என்னிடம் எடுத்துக் கொடுங்கள். யார் தேசியவாதி, யார் தேசியவாதி இல்லை என்று மக்கள் பார்க்கட்டும் என்றும் அவர் பேசியுள்ளார்.

கணேஷ் கோடியாள்
கணேஷ் கோடியாள்

இதனிடையே உத்தராகண்ட்டின் முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவரான கணேஷ் கோடியாள் மகேந்திர பட்டின் இந்தக் கருத்தைக் கடுமையாகச் சாடியுள்ளார். ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராக இருப்பதால் அவர் பேசுவதற்கு முன் இருமுறை யோசிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

மேலும் அவர், "நான் மலைப்பகுதிகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறேன், பல வீடுகளில் மூவண்ணக் கொடி ஏற்றப்படாமல் இருப்பதைப் பார்க்க முடிகிறது, ஒருவேளை பா.ஜ.க ஆட்சியில் அவர்களின் கடினமான நிதி நிலைமைகூட அதற்குக் காரணமாக இருக்கலாம்" என்று பேசியிருக்கிறார்.