Published:Updated:

"அவள் கெஞ்சிக்கேட்டும் வீடியோவைப் பரப்பிவிட்டனர்"-சாக்லேட் எடுத்த விவகாரம்; விபரீத முடிவெடுத்த மாணவி

தற்கொலை

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகியிருக்கிறது. அதனால், மனமுடைந்த கல்லூரி மாணவி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாக அவர் குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.

"அவள் கெஞ்சிக்கேட்டும் வீடியோவைப் பரப்பிவிட்டனர்"-சாக்லேட் எடுத்த விவகாரம்; விபரீத முடிவெடுத்த மாணவி

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகியிருக்கிறது. அதனால், மனமுடைந்த கல்லூரி மாணவி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாக அவர் குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.

Published:Updated:
தற்கொலை

மேற்கு வங்க மாநிலம், அலிபுர்துார் மாவட்டத்தில் இறுதியாண்டு படிக்கும் கல்லூரி மாணவி ஒருவர், தன் தங்கையுடன் செப்டம்பர் 29-ம் தேதி அந்தப் பகுதியில் உள்ள ஒரு மாலுக்குச் சென்றிருக்கிறார். அப்போது, அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் ஒரு சாக்லேட்டை எடுத்திருக்கிறார். அதை அங்கிருக்கும் ஊழியர்கள், தங்களது போனில் வீடியோ எடுத்திருக்கின்றனர். அதை அறிந்துகொண்ட மாணவி, தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டிருக்கிறார். மேலும், அந்த வீடியோவை யாருக்கும் பகிரவோ, வெளியிடவோ வேண்டாம் எனக் கெஞ்சியிருக்கிறார்.

தற்கொலை
தற்கொலை

ஆனால், இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகியிருக்கிறது. அதனால், மனமுடைந்த கல்லூரி மாணவி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாக அவர் குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாணவியின் தந்தை, ``என் மகள் சாக்லேட்டை எடுக்கும் வீடியோ வைரலானதையடுத்து, மன அழுத்தத்தில் இருந்தாள். அவள் தவறு செய்துவிட்டாள். வீடியோவை யாருக்கும் பகிர வேண்டாம் என்று அவர்களிடம் என் மகள் கெஞ்சினாள். ஆனால், அவர்கள், வீடியோவை வைரலாக்கி, என் மகளின் உயிரைப் பறித்துவிட்டார்கள். வேண்டுமானால் அவர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்கலாமே... இன்று என் மகள் தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டாள். நான் அவளை எப்படி மீட்டெடுப்பேன்?" என அழுதுகொண்டே கூறினார்.

காவல்துறை
காவல்துறை

இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதி மக்கள், அந்த ஷாப்பிங் மால் முன்பு கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வீடியோ எடுத்தவர்கள்மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இறந்த மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.