Published:Updated:

`போனைத் தர முடியாது’ - கேம் விளையாட மொபைல்போனைக் கொடுக்காத தம்பி; விபரீத முடிவெடுத்த சிறுமி!

சித்திரிப்புப் படம்
சித்திரிப்புப் படம்

மும்பையில் மொபைல்போனை, தம்பி விளையாடக் கொடுக்காததால் கோபத்தில் 16-வயது சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு ஸ்மார்ட்போன்களின் தேவை அதிகரித்துவிட்டது. அதிலும் மாணவர்களின் பெரும்பாலான நேரம் மொபைல்போனில்தான் கழிந்துகொண்டிருக்கிறது. சில வீடுகளில் சகோதரன், சகோதரிகள் இருக்கும்போது அங்கு மொபைல்போன் குறைவாக இருக்கும்பட்சத்தில், சகோதரர்களிடையே போனைப் பயன்படுத்துவதில் தகராறு ஏற்படுவதுண்டு. அது போன்ற ஒரு சம்பவம் மும்பையில் நடந்திருக்கிறது. மும்பை காந்திவலி சமதா நகரில் வசித்தவர் நிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 16 வயது சிறுமியான இவர் வீட்டில் எப்போதும் மொபைல்போனில் விளையாடுவது வழக்கம். நிஷா பயன்படுத்தும் மொபைல்போனைத்தான் அவரின் 14 வயது சகோதரனும் பயன்படுத்திவந்திருக்கிறார். இதனால் போனைப் பயன்படுத்துவதில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதுண்டு.

சித்திரிப்பு படம்
சித்திரிப்பு படம்

வழக்கம்போல் மீண்டும் அவர்களுக்குள் போனை யார் பயன்படுத்துவது என்பதில் தகராறு ஏற்பட்டது. சிறுமியின் சகோதரன் மொபைல்போனில் விளையாடிக்கொண்டிருந்தான். தானும் மொபைல்போனில் விளையாடப்போவதாக சிறுமி சொன்னாள். ஆனால் அவரின் சகோதரன் போனைக் கொடுக்க முடியாது என்று கூறியிருக்கிறார். இதனால் கோபத்தில் நிஷா வேகமாக வீட்டைவிட்டு வெளியில் சென்றாள். மருந்துக் கடையிலிருந்து எலி மருந்தை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வந்து தனது சகோதரனிடம் இது குறித்துச் சொன்னாள்.

சிறுமி கொடுத்த புகார்; லிஃப்ட் கொடுப்பதுபோல் பாலியல் அத்துமீறல்! - உறவுக்கார நபர் கைது

சகோதரர் இது குறித்து தன் தந்தைக்கும், வீட்டிலிருந்த மற்றொரு சகோதரிக்கும் தகவல் கொடுத்தார். பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடிவந்து சிறுமியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனலிக்காமல் நிஷா இறந்துபோனார். இது குறித்து இன்ஸ்பெக்டர் ஆனந்த்ராவ் கூறுகையில், `சிறுமி நிஷாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக சதாப்தி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேற்கொண்டு விசாரித்துவருகிறோம்’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு