Published:Updated:

185 பயணிகளுடன் புறப்படத் தயாரான விமானம்; தோழியின் வாட்ஸ்அப் செய்தியால் ஆறு மணி நேரம் தாமதம்!

இண்டிகோ விமானம்

மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவரின் சந்தேகத்துக்கிடமான வாட்ஸ்அப் செய்தியால், விமானம் புறப்படுவதற்கு ஆறு மணி நேரம் தாமதமானது.

மங்களூரூ விமான நிலையத்திலிருந்து மும்பைக்குச் செல்ல இண்டிகோ விமானம் ஒன்று தயார் நிலையில் இருந்தது. அந்த சமயம் பார்த்து விமானத்தில் இருந்த சக பயணி ஒருவரின் செல்போனில் `நீ ஒரு வெடிகுண்டு வீசுபவர்’ (You Are A Bomber) என்று வாட்ஸ்அப்பில் வந்த குறுஞ்செய்தியை அருகில் இருந்த பெண் பயணி ஒருவர் தற்செயலாகப் படித்துவிட்டார்.

விமானம்
விமானம்

உடனே அவர் இது தொடர்பாக விமானத்தில் இருந்த அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதையடுத்து விமானத்திலுள்ள அனைத்துப் பயணிகளின் உடைமைகளில் தீவிர சோதனை நடைபெற்றது. இறுதியில் குறிப்பிட்ட நபரின் தோழியுடனான தனிப்பட்ட உரையாடலில் அவர் மேலே குறிப்பிட்ட வார்த்தையைப் பயன்படுத்தினார் என்றும், அதில் உள்நோக்கம் இல்லை என்றும் தெரியவந்திருக்கிறது.

கடைசியில் பரிசோதனைகளெல்லாம் முடிந்த பின்னர் 185 பயணிகள் மீண்டும் அதே விமானத்தில் ஏற்றப்பட்டு, ஆறு மணி நேரம் தாமதத்துக்குப் பிறகு மும்பைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இது தொடர்பாக போலீஸார் வழக்கும் பதிவுசெய்துள்ளனர்.