Published:Updated:

``இந்தியாவை தலைநிமிரச் செய்வோம்" - ரோபோ ஒலிம்பிக்குக்குத் தேர்வாகிய இந்தியாவின் முதல் பெண்கள் அணி!

'ரோபோ ஒலிம்பிக்'கில் முதல் முறையாக, இந்தியாவின் சார்பாக அனைவரும் பெண்களாகச் செல்வது இதுவே முதல் முறையாகும்.

ரோபோ ஒலிம்பிக்
ரோபோ ஒலிம்பிக் ( pc- india times. )

'தி ஃபர்ஸ்ட் குளோபஸ் சேலஞ்ச்' என்ற அமைப்பு ஒவ்வொரு வருடமும் உலக அளவில் மாற்றம் தேவைப்படும் சமூக பிரச்னைகளுக்கு, ரோபோ மூலம் தீர்வுகாணும் 'ரோபோ ஒலிம்பிக்' என்ற போட்டியைப் பல்வேறு நாடுகளில் நடத்திவருகிறது. இந்த வருடம், அக்டோபர் மாதம் 24-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடக்கவிருக்கிறது. இறுதிச்சுற்றுக்குத் தேர்வுபெற்றுள்ள இந்திய அணியில் அனைவருமே பெண்கள் என்பதுதான் இதில் ஹைலைட். 'ரோபோ ஒலிம்பிக்'கில், இந்தியாவின் சார்பாக அனைவரும் பெண்களாகச் செல்வது இதுவே முதல் முறை,

வருகிறது துப்புரவுத் தொழிலாளிகளின் `காப்பான்'... சென்னை ஐ.ஐ.டி உருவாக்கிய `SEPoy' ரோபோ!
ரோபோ
ரோபோ

அறிவியல், கண்டுபிடிப்புகள் என்றாலே ஆண்களின் பங்களிப்புகள்தான் அதிகமாக இருக்கும் என்ற நிலையை மாற்றி ஆருஷி, ராதிகா, ஆயுஷி, ஜாஸ்மேகர், லாவண்யா என்ற மும்பைச் சேர்ந்த ஐந்து பெண்கள் தேர்வாகி, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் குறிப்பாக, இந்தியப் பெண்களுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

ஆருஷி, ரோபோ வடிவமைப்பில் உள்ள எலக்ட்ரானிக் தொடர்பான பணியிலும், ராதிகா ரோபோ உருவாக்கத்துக்கான புரொகிராம் தயாரிப்பிலும், ஆயுஷி அவுட் ரீச் புரோகிராமிலும், ஜாஸ்மேகர், லாவண்யா இருவரும் ரோபோவின் வெளிப்புற வடிவமைப்பிலும் திறன் பெற்றவர்கள். எனிலும், உலக அளவில் நடைபெறும் நிகழ்ச்சி என்பதால் போட்டி, கடினமாகத்தான் இருக்கும். 

ரோபோ
ரோபோ

'தி ஃபர்ஸ்ட் குளோபஸ் சேலஞ்ச்'அமைப்பின் இந்த வருட போட்டியின் தலைப்பு, 'ரோபோ மூலம் ஓசோன் பிரச்னைகளுக்கு தீர்வு காணுதல்.' இதில்,193 நாடுகளிலிருந்து 14 முதல் 18 வயதுடைய 2,000 மாணவர்கள் இந்தப்போட்டியில் கலந்துகொள்ள உள்ளதாகப் போட்டி நடத்தும் அமைப்பு தெரிவித்திருக்கிறது.

இது குறித்து இந்தியப் போட்டியாளர்கள் பேசியபோது, "ரோபோடிக் என்பது எங்களின் கனவு எனினும், இந்தப் போட்டியில் நாங்கள் அதற்காக மட்டும் கலந்துகொள்ளவில்லை. உலக அளவில் அறிவியல், கணிதம், டெக்னாலஜி, பொறியியல் போன்ற துறைகளில் இன்னும் பெண்கள் முழுவதுமாக வளர்ச்சி அடையாத நிலையில்தான் இருக்கிறார்கள். பெண்களாலும் இந்தத் துறையில் சாதிக்க முடியும் என்பதை நிரூபிக்கக் கிடைத்த வாய்ப்பாகவே இதைப் பார்க்கிறோம்.

இந்தியா
இந்தியா

இதன், முதல்கட்ட முயற்சியாக சில ஆண்டுகளாகவே பின்தங்கிய சில கிராமங்களுக்குச் சென்று, அங்கு இருக்கும் பெண்களுக்கு அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்பவர்களுக்கு நாங்களே உதவிகளையும் செய்து வருகிறோம். இந்தப் போட்டியில் எங்களுக்கான வெற்றி என்பது, பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஆயுதமாகப் பார்க்கிறோம். 193 நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி இந்தியாவை தலைநிமிரச் செய்வோம்" என்று கூறியுள்ளனர்.