Published:Updated:

சிறுமிகள் கூட்டு சிறார் வதை: `அரசை மட்டுமே குறை சொல்லாதீர்கள்!' - கோவா முதல்வரின் சர்ச்சை பதில்

கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்
கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் ( Photo: @goacm )

கோவாவில் உள்ள பெனாலிம் கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இரண்டு சிறுமிகள் கூட்டுப் சிறார் வதைக்கு ஆளான நிலையில் நேற்று மற்றொரு சிறுமியும் சிறார் வதைக்கு ஆளாகியிருப்பது அம்மாநிலம் முழுக்கக் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கோவாவில் உள்ள பெனாலிம் கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இரண்டு சிறுமிகள் கூட்டு சிறார் வதைக்கு ஆளான நிலையில், நேற்று மற்றொரு சிறுமியும் சிறார் வதைக்கு ஆளாகியிருப்பது அம்மாநிலம் முழுக்கக் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வேலை வாங்கித் தருவதாகக் கூறி அச்சிறுமியை அழைத்த இருவர் கோவாவின் தெற்குப் பகுதியில் உள்ள கியூபெம் என்கிற ஊரில் அடைத்துவைத்து மூன்று நாள்கள் சிறார் வதைக்கு ஆளாக்கியிருக்கின்றனர். இந்தக் கொடும்பாதகத்தை நிகழ்த்திய 32 வயது இளைஞரையும், 63 வயது முதியவரையும் கைது செய்துள்ள காவல்துறை அவர்களை ஐந்து நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரித்து வருகிறது.

sexual harassment
sexual harassment
பொம்மலாட்ட வீடியோ மூலம் மாணவிகளுக்கு பாலியல் விழிப்புணர்வு; அரசுப்பள்ளி ஆசிரியையின் புது முயற்சி!

ஒரே வாரத்தில் இப்படி மூன்று சிறுமிகள் பாதிக்கப்பட்டிருப்பது அங்கே பெண்களின் பாதுகாப்பு குறித்த விவாதங்களைக் கிளப்பியுள்ளன. குறிப்பாக பெனாலிம் கடற்கரையில் இரண்டு சிறுமிகள் கூட்டு சிறார் வதைக்கு ஆளாகியிருப்பது குறித்து அம்மாநில முதல்வர் வெளியிட்டுள்ள கருத்துக்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

``தங்கள் மகள்கள் இரவு நேரத்தில் ஏன் தாமதமாக வீடு திரும்புகிறார்கள் என்பதை பெற்றோர் அறியவேண்டும். குறிப்பாக 14 வயதுகளில் இருக்கும் அச்சிறுமிகள் இரவு முழுக்கக் கடற்கரையில் இருப்பதன் காரணத்தை பெற்றோர் தெரிந்துகொள்ளவேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பைப் பெற்றோரே உறுதிசெய்யவேண்டும். அரசையும் காவல்துறையையும் மட்டுமே குறைசொல்லக்கூடாது. மற்றபடி குழந்தைகள், பெரியவர்களின் வார்த்தைகளைக் காதுகொடுத்துக் கேட்கமாட்டார்கள் என்பதற்காக இதற்கான பொறுப்பை அரசிடமும், காவல்துறையினரிடமும் விட்டுவிடக்கூடாது" என்று கோவா முதல்வர் பேசியிருந்தார்.

கோவா முதல்வர் பிரமோத் சாவந்தின் இந்தக் கருத்து அம்மாநில மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. `மக்களைப் பாதுகாக்கவேண்டிய ஒரு மாநிலத்தின் முதல்வர் இப்படி பொறுப்பின்றிப் பேசலாமா' என விமர்சனங்களும் அதிகமாக எழுந்தன. ஆனால், தான் சொல்லிய கருத்து தவறான அர்த்தத்தில் புரிந்துகொள்ளப்பட்டதாக கோவா முதல்வர் இன்று அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்
கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்
Photo: @goacm
ஜீன்ஸ் அணிந்ததால் குடும்பத்தினரால் கொலை செய்யப்பட்ட 9-ம் வகுப்பு மாணவி; உ.பி-யில் அதிர்ச்சி சம்பவம்!

சிறார்களின் பாதுகாப்புக்கு பெற்றோர், அரசு என்று அனைவருமே கூட்டாகப் பொறுப்பேற்கவேண்டும் என்று கூறியிருக்கும் முதல்வர், சிறுமிகளுக்கு ஏற்பட்டிருக்கும் இந்தக் கொடுமை தன்னை மிகுந்த மனவலியில் ஆழ்த்தியுள்ளதாகவும், குற்றம் இழைத்தவர்களுக்கு சட்டத்திற்கு உட்பட்ட கடும்தண்டனை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

``தானும் ஒரு 14 வயதுப் பெண் குழந்தையின் தந்தை என்பதால் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் குடும்பம் எத்தகைய துன்பத்திற்கு ஆளாகியிருக்கும் என்பதைத் தன்னால் நன்கு உணரமுடிகிறது" என்று விளக்கம் தெரிவித்திருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு