Published:Updated:

`மனைவி கிரிக்கெட் மட்டையால் அடிக்கிறார்!' - சிசிடிவி ஆதாரங்களோடு நீதிமன்றம் சென்ற கணவர்

அடி ( twitter )

சுமனை காதலித்து திருமணம் செய்துகொண்டவருக்கு, திருமணத்துக்குப் பிறகு, சுமனின் கோப குணம் தெரிய வந்துள்ளது. கோபத்தில் கையில் கிடைக்கும் பூரிக்கட்டை, கிரிக்கெட் மட்டை என அனைத்தும் அஜித்தை தாக்கும் ஆயுதங்களாக மாறி உள்ளது சுமனுக்கு. ஒரு கட்டத்துக்கு மேல் காவல் நிலையத்தை அணுகியுள்ளார்.

குடும்ப வன்முறையை ஆண்கள் செய்தாலும், பெண்கள் செய்தாலும் குற்றமே. பெண்கள் மட்டுமல்ல, அரிதாக சில வீடுகளில் ஆண்களும் அதற்கு ஆளாவதுண்டு. மனைவி தன்னை அடிப்பதை எப்படி வெளியே சொல்வது, வெளியே சொன்னால் அசிங்கமாக இருக்கும், யார் நம்புவார்கள் எனச் சொல்லாமல் சில பேர் இருந்து விடுவதுண்டு. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ள அஜித் சிங் யாதவ் எனும் தலைமை ஆசிரியர், தன் மனைவி தன்னை கையில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு அடிப்பதாகக் கூறி நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.

குடும்ப வன்முறை (சித்திரிப்புப் படம்)
குடும்ப வன்முறை (சித்திரிப்புப் படம்)

ஏழு வருடங்களுக்கு முன் சுமன் என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்ட அஜித் சிங்க்கு, திருமணத்துக்குப் பிறகு, சுமனின் கோப குணம் தெரிய வந்துள்ளது. கோபத்தில் கையில் கிடைக்கும் பூரிக்கட்டை, கிரிக்கெட் மட்டை என அனைத்தும் அஜித்தை தாக்கும் ஆயுதங்களாக மாறியுள்ளன சுமனுக்கு. ஒரு கட்டத்துக்கு மேல் அடியைத் தாங்கிக்கொள்ள முடியாதவர் காவல் நிலையத்தை அணுகி உள்ளார். காவல் நிலையம் பெரிதாக அவரைக் கண்டுகொள்ளவில்லை. மனைவிடமிருந்து தனக்கு பாதுகாப்பு அளிக்குமாறு நீதிமன்றத்தை அணுக நினைத்தவர், இதற்கான ஆதாரங்களை திரட்ட வீட்டில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி, தான் அடிவாங்குவதை ஆதாரமாக்கி, நீதிமன்ற விசாரணையின்போது நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

அந்த வீடியோ பதிவைக் கண்ட நீதிபதி, அப்பெண் தாக்குவதைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளானார். மேலும், அப்பெண்ணிடமிருந்து அஜித்தின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு உத்தரவிட்டார். இது குறித்து அஜித் கூறும்போது, ``சுமன் மீது நான் கை நீட்டியதில்லை. நான் ஓர் ஆசிரியர். ஓர் ஆண், அதுவும் ஆசிரியர் ஒரு பெண் மீது கையை உயர்த்தினால் அது இந்திய கலாசாரத்துக்கு எதிரானது" எனத் தெரிவித்துள்ளார்.