Published:Updated:

`ஷார்ட் விசிட் பாஸ்; பலகட்ட ஆய்வுகள்!’ - எல்லைக் கட்டுப்பாடுகளில் அசத்தும் கேரளம்

குமுளி
குமுளி

தமிழக கேரள எல்லையான குமுளியில், கேரள அரசு செய்துவரும் நடவடிக்கைகள், தமிழகத்திற்கு முன்னுதாரணமாக விளங்குகிறது.

இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள ஏலக்காய் தோட்டங்கள் பெரும்பாலும், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்குச் சொந்தமானது. இதனால், மாநில எல்லையைக் கடந்துதான் ஏலக்காய் தோட்டங்களுக்குச் சென்றாக வேண்டும். கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழக-கேரள எல்லை மூடப்பட்டதால், விவசாயிகள் தங்களது தோட்டங்களுக்குச் செல்ல முடியாத சூழல் நிலவியது. இரு மாநில அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வு கடைபிடிக்கப்படுவதால், கேரள அரசு, ’ஷார்ட் விசிட் பாஸ்’ என்ற முறையை அறிமுகம் செய்துள்ளது.

குமுளி
குமுளி
`தாராவி டு தேனி; 30 பயணிகள்; போலி இ-பாஸ்!’ - அதிரவைத்த ஆம்னி பேருந்து மோசடி

”ஏலக்காய் தோட்டங்களுக்குச் செல்பவர்களுக்கு ஒரு நாள் மட்டுமே அனுமதி கொண்ட ’ஷார்ட் விசிட் பாஸ்’ கொடுக்கப்படுகிறது. தோட்டத்தில் தங்க வேண்டும் என கூறுபவர்களுக்கு, ஆறு நாள் பாஸ் அல்லது ஒரு வருட பாஸ் என இரண்டு முறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. ஆன்லைன் மூலம், கேரளாவில் நாம் எங்கு செல்ல வேண்டும்... என்ன காரணத்திற்கு எனக் குறிப்பிட்டு அப்ளை செய்ய வேண்டும். அதை ஆய்வு செய்யும் கேரள அரசு, காரணத்தின் அடிப்படையில் அனுமதி கொடுக்கின்றனர். ஒரு நாள் பாஸ் கேட்பவர்களுக்குப் பெரும்பாலும் உடனே அனுமதி கிடைத்துவிடுகிறது. ஆறு நாள் அல்லது ஒரு வருடம் பாஸ் கேட்பவர்களுக்கு மட்டும், அவர்கள் தங்கும் இடத்திற்குச் செல்லும் உள்ளூர் பஞ்சாயத்து அதிகாரி, தமிழ்நாட்டிலிருந்து வரும் நபரை 14 நாட்கள் தனிமைப்படுத்தும் வசதி அங்கே உள்ளதா என ஆய்வு செய்வார். இடவசதி உள்ளது என பஞ்சாயத்து அதிகாரி சொன்னால் மட்டுமே, பாஸ் ஓகே ஆகிறது. இல்லையென்றால் பாஸ் கிடைக்காது. இது, ஏலக்காய் விவசாயிகளுக்கு மட்டுமல்லாது, சாதாரண மக்கள், கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என கேரளா செல்ல இ-பாஸ் அப்ளை செய்யும் அனைவருக்கும் பொருந்தும். கட்டுப்பாடுகளில் கொஞ்சம் கூட தளர்வைக் கொடுக்காமல் இருக்கிறது கேரளா” என்றார், ஏலக்காய் விவசாயி ஒருவர்.

`ஜூன் மாதமும் ஒற்றை யானை தாக்குதலும்!’ -கலக்கத்தில் தேனி, தேவாரம் மக்கள்
கேரள இ-பாஸ்
கேரள இ-பாஸ்

இது தொடர்பாக கேரள அதிகாரிகள் கூறும்போது, “பெரும்பாலும் ஏலக்காய் விவசாயிகள், புத்தடியில் நடக்கும் ஏலக்காய் ஏலத்திற்குச் செல்லும் வியாபாரிகளே இ-பாஸ் அப்ளை செய்கின்றனர். ஒருநாள் இ-பாஸ் கொடுக்கும்போது, குமுளியில் அவர்களுக்கு கொரோனா அறிகுறி உள்ளதா என சோதிக்கப்படுகிறது. மேலும், குமுளியில் அமைக்கப்பட்டுள்ள இ-பாஸ் சென்டரில் அவர்களுக்கு ஆன்லைன் மூலம் கிடைக்கப்பெற்ற அனுமதி குறித்து சோதிக்கப்படும். அதில், பயணம் செய்யும் வாகனம், நபர்களின் எண்ணிக்கை, அவர்களின் ஐ.டி கார்டு போன்றவை மறு ஆய்விற்கு உட்படுத்தப்படும். தொடர்ந்து, அவர்கள் கையில் இடுக்கி கலெக்டர் கையெழுத்துடன் கூடிய பாஸ் வழங்கப்படும். ஒரு நாள் பாஸ் வாங்குபவர்களுக்கு, பாஸில், கேரள எல்லைக்குள் அவர்கள் நுழையும் நேரமும் வெளியே வர வேண்டிய நேரமும் குறிப்பிடப்படும். அந்த நேரத்திற்குள் வந்துவிட வேண்டும். ஆறு நாள் மற்றும் ஒரு வருடம் பாஸ் கேட்பவர்களுக்கென தனியாக விதி உள்ளது. குமுளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும். தொடர்ந்து, அவர்களது இடத்தில் 14 நாட்களுக்கு கட்டாய தனிமையில் இருக்க வேண்டும். அவர்களுக்கான உணவுகூட, பஞ்சாயத்தில் இருந்து ஏற்பாடு செய்யப்படுகிறது. இப்படி, எல்லைக்குள் நுழையும் ஒவ்வொரு நபரும் தொடர் கண்காணிப்பில் இருப்பர்” என்றனர்.

`கடைசியில் அவன காப்பாத்த முடியலையே..!' - கிணற்றில் விழுந்த சிறுவனால் கலங்கிய தேனி கிராமம்
அடுத்த கட்டுரைக்கு