Published:Updated:

நாட்டிலேயே முதல் முறை... சிறையில் கைதிகள் பெறும் சம்பள அடிப்படையில் கடனுதவி! - மகாராஷ்டிரா அரசு

திலிப் வல்சே பாட்டீல்

நாட்டிலேயே முதல் முறையாக மகாராஷ்டிரா அரசு சிறைக் கைதிகளுக்கு கடனுதவி வழங்க முடிவு செய்துள்ளது.

நாட்டிலேயே முதல் முறை... சிறையில் கைதிகள் பெறும் சம்பள அடிப்படையில் கடனுதவி! - மகாராஷ்டிரா அரசு

நாட்டிலேயே முதல் முறையாக மகாராஷ்டிரா அரசு சிறைக் கைதிகளுக்கு கடனுதவி வழங்க முடிவு செய்துள்ளது.

Published:Updated:
திலிப் வல்சே பாட்டீல்

தண்டனை பெற்று சிறைகளில் அடைக்கப்பட்டு இருக்கும் கைதிகளுக்கு அவர்களின் திறமைக்கு ஏற்ப வேலை வழங்கப்படுகிறது. அவர்கள் செய்யும் வேலைக்கு தக்கபடி சம்பளமும் வழங்கப்படுகிறது. இச்சம்பளத்தின் மூலம் கைதிகள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். அதனை தங்களது உறவுகளுக்கும் அனுப்பி வைக்க முடியும். திடீரென எதாவது குற்றத்தில் ஈடுபட்டுவிட்டு சிறைக்கு செல்லும் கைதிகளால் அவர்களின் குடும்பத்தினர் வருமானத்திற்கு வழியில்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். அதுபோன்ற ஒரு நிலையை தடுக்க மகாராஷ்டிரா அரசு புதிதாக கைதிகளுக்கு கடனுதவி திட்டத்தை அறிவித்துள்ளது. சிறையில் கைதிகள் வாங்கும் சம்பளத்தை பொறுத்து அவர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் அதிகபட்சமாக 50 ஆயிரம் வரை கடனுதவி வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.

கைதிகளின் தண்டனை காலம், அவர்கள் ஒரு ஆண்டில் எத்தனை நாட்கள் வேலை செய்கின்றனர் என்பது போன்ற விபரங்களும் ஆய்வு செய்யப்பட்டு அதற்கு தக்கபடி இந்த கடனுதவி வழங்கப்படும் என்றும், இதற்கு யாரின் உத்தரவாதமும் தேவையில்லை என்று மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் திலிப் வல்சே பாட்டீல் தெரிவித்துள்ளார். நாட்டிலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்திற்கு கைதிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

எரவாடா சிறை
எரவாடா சிறை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆரம்பத்தில் இத்திட்டம் புனே எரவாடா சிறை கைதிகளுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்றும் படிப்படியாக இது வேறு சிறைகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் அமைச்சர் பாட்டீல் தெரிவித்தார். முதல் கட்டமாக இதில் 1055 கைதிகள் பயனடைய இருக்கின்றனர். ஆயுள் தண்டனை கைதிகள், 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்ற கைதிகளுக்கு இத்திட்டம் பொருந்தும். கடனுதவி சம்பந்தப்பட்ட கைதியின் உறவினர்களிடம் சென்றடைவதை வங்கிகள் உறுதி செய்யவேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. கடனுக்கு 7 சதவீத வட்டி வசூலிக்கப்படும். இத்திட்டம் குறித்து பேசிய மாநில உள்துறை அமைச்சர், ``சிறையில் பணிபுரியும் போது கிடைக்கும் வருமானத்தின் அடிப்படையில் கடன் பெறுவது. நாட்டிலேயே முதல், புதுமையான கடன் திட்டம்” என்றார்.

இத்திட்டத்தின் மூலம் சிறையில் இருக்கும் கைதிகள் தங்களது குடும்பத்திற்கு எதையும் செய்ய முடியவில்லையே என்ற கவலையில் இருந்து விடுபட முடியும் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.