Published:Updated:

`50 வி.ஐ.பி-க்கள்; பிரமாண்ட திரைகள்!’ - தயாராகும் ராமர் கோயில் அடிக்கல் நாட்டுவிழா

ராமர் கோயில்
ராமர் கோயில் ( மாதிரி புகைப்படம் )

அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளதாகக் கோயிலின் அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் அதன் இறுதித் தீர்ப்பு கடந்த வருடம் நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. அதில் சர்ச்சைக்குரிய இடத்தை ராமர் கோயில் கட்டுவதற்கு ஒதுக்க வேண்டும் என ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு அறிவித்தது. மேலும், கோயில் கட்டுவதற்காகப் புதிய அறக்கட்டளை ஒன்றை அமைத்து கோயில் கட்டுவதற்கான பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அயோத்தி
அயோத்தி

இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா வரும் ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி நடைபெறவுள்ளது. கொரோனா பரவலால் இரண்டு மாதங்கள் தாமதமானதால், தற்போது விழாவுக்கான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடந்து வருவதாக ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். அடிக்கல் நாட்டு விழாவுக்கு சுமார் 50 வி.ஐ.பி-க்கள் கலந்துகொள்வார்கள் என்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளின்படி இந்த விழா நடக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி நிலம்! - 1528 முதல் 2019 தீர்ப்புவரை நடந்தது என்ன? #AyodhyaVerdict

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் அவரது அலுவலகத்திலிருந்து அவரது பங்கேற்பை உறுதிப்படுத்தவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த அடிக்கல் நாட்டு விழாவைப் பக்தர்கள் காண ஏதுவாக அயோத்தி முழுவதும் பிரமாண்ட எல்.இ.டி திரைகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அறக்கட்டளை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயில் இயக்கத்துடன் தொடர்புடைய அனைத்து மூத்த பா.ஜ.க தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைக்கப்பட உள்ளதாகவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூத்த தலைவர்களும் அதன் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டவர்களும் விழாவில் கலந்துகொள்வார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அயோத்தி
அயோத்தி

அயோத்தியில் தற்காலிகமாகக் கட்டப்பட்ட ராமர் கோயில், நாடு முழுவதும் அன்லாக் 2 அறிவிக்கப்பட்டபோது, அதாவது ஜூன் 8-ம் தேதி திறக்கப்பட்டது. மார்ச் மாதத்தில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ராமர் சிலையை தகரத்தால் அமைக்கப்பட்ட புதிய கட்டடத்துக்கு மாற்றினார். இந்தியாவில் முதல்கட்ட கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

`உண்மையான அயோத்தி நேபாளத்தில்தான் உள்ளது!’ - நேபாள பிரதமரின் பேச்சால் சர்ச்சை
அடுத்த கட்டுரைக்கு