Published:Updated:

கேரளாவில் மணப்பெண், உக்ரைனில் மாப்பிள்ளை; கூகுள் மீட்டில் நடந்த ஆன்லைன் திருமணம்!

கொரோனாவால் ஊருக்கு வரமுடியாமல் உக்ரைன் நாட்டில் இருக்கும் மணமகன், அங்கு இருந்தபடியே கேரளாவில் இருந்த மணப்பெண்ணுடன் வீடியோ காலில் கனெக்ட் ஆகி, சட்டப்படி சப் ரெஜிஸ்டர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்த சம்பவம் கேரள மாநிலத்தில் இப்போது நடைபெற்றுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்ட முதல் மாநிலம் கேரளா. கொரோனா ஊரடங்கு நேரத்தில் கேரளத்தில் பல புதுமையான திருமண நிகழ்வுகள் நடைபெற்றன. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்த அஞ்சனாவால், தனக்குத் திருமணம் நிச்சயக்கப்பட்ட தினத்தில் ஊருக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டது. மணமகன் ஸ்ரீஜித் கேரள மாநிலம் கோட்டயம் சங்கனாச்சேரியில் இருந்தார். எனினும், குறித்த தேதியில் திருமணத்தை நடத்தி முடிக்க வேண்டும் என முடிவு செய்தது இந்த ஜோடி. இதையடுத்து மொபைலில் வீடியோ கால் மூலம் திருமணம் செய்து முடித்தனர். சங்கனாச்சேரியில் இருந்து அஞ்சனாவை வீடியோ காலில் அழைத்து திருமணச் சடங்குகளை செய்துமுடித்த ஶ்ரீஜித், மொபைலுக்குத் தாலிகட்டினார். அதே நேரம், லக்னோவில் இருந்த மணப்பெண் அஞ்சனாவின் கழுத்தில் அவரின் உறவினர் பெண் தாலி கட்டினார். இந்தத் திருமணம் சம்பிரதாயப்படி நடந்தாலும், சட்டப்படி இருவரும் நேரில் சென்றுதான் திருமணத்தைப் பதிவு செய்ய முடியும்.

புனலூர் சப் ரெஜிஸ்டர் அலுவலகத்தில் திருமணம் பகிவுசெய்யப்பட்ட சான்றிதழை மணமகள் தன்யா மார்ட்டினிடம் வழங்கும் அதிகாரி
புனலூர் சப் ரெஜிஸ்டர் அலுவலகத்தில் திருமணம் பகிவுசெய்யப்பட்ட சான்றிதழை மணமகள் தன்யா மார்ட்டினிடம் வழங்கும் அதிகாரி
“ஒரு கீலி வேணும்னு வந்திருக்கேன்!” - மரபு மாறாத இருளர் திருமணம்

இந்நிலையில் இதேபோல், கொரோனாவால் ஊருக்கு வர முடியாமல் உக்ரைன் நாட்டில் இருக்கும் மணமகன், அங்கு இருந்தபடியே கேரளாவில் இருந்த மணப்பெண்ணுடன் வீடியோ காலில் கனெக்ட் ஆகி, சட்டப்படி சப் ரெஜிஸ்டர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்த சம்பவம் கேரள மாநிலத்தில் இப்போது நடைபெற்றுள்ளது.

கேரள மாநிலம் புனலூர் இலம்பல் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவன்குமார். இவர் உக்ரைன் நாட்டில் வேலை செய்து வருகிறார். ஜீவன்குமாருக்கும் திருவனந்தபுரம் களக்கூட்டத்தைச் சேர்ந்த தன்யா மார்ட்டினுக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது. சிறப்புத் திருமணச் சட்டம் மூலம் தங்கள் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும் எனக் கடந்த மார்ச் மாதம் மனு அளித்தனர் இந்த ஜோடி. ஆனால், கொரோனா காரணமாக ஜீவன்குமாரால் சொந்த ஊருக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து ஜீவன்குமார் சார்பில் கேரளா உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில், திருமணம் பதிவு செய்ய அளிக்கப்பட்ட மனுவின் காலாவதி தேதியை நீட்டிக்க வேண்டும் என்றும், சப் ரெஜிஸ்டர் அலுவலகத்தில் நேரில் ஆஜர் ஆவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும், மாறாக வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் திருமணத்தை நடத்தித் தர வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மாநில அரசு, வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை ஆகியவற்றின் கருத்துகளைக் கேட்டறிந்தது. விசாரணை முடிவில் ஜீவன்குமார் தரப்புக்கு சாதகமான தீர்ப்பு வந்தது.

கொரோனா காலத்தில் நடாத ஸ்ரீஜித்தின் ஆன்லைன் திருமணம்
கொரோனா காலத்தில் நடாத ஸ்ரீஜித்தின் ஆன்லைன் திருமணம்
`அரச பட்டமும் வேண்டாம்; நிதியுதவியும் வேண்டாம்!' - காதலுக்காக துறந்த ஜப்பான் இளவரசி மகோ

இதைத் தொடர்ந்து புனலூர் சப் ரெஜிஸ்டர் அலுவலகத்தில் ஜீவன்குமார்- தன்யா மார்ட்டின் ஆகியோரது பதிவுத் திருமணம் நடைபெற்றது. ஜீவன்குமாருக்குப் பதிலாக அவரின் தந்தை தேவராஜன் சப் ரெஜிஸ்டர் அலுவலகத்தில் கையெழுத்து போட்டார். சப் ரெஜிஸ்டிரார் பிரோஸ் முன்னிலையில் இந்தத் திருமணம் நடைபெற்றது. கூகுள் மீட் மூலம் உக்ரைனில் உள்ள ஜீவன்குமாரை பார்த்தார் சப் ரெஜிஸ்டிரார் பிரோஸ். அதுபோல மாவட்ட ரெஜிஸ்டிரார் ஜான்சன் கூகுள் மீட் வழியாக மணமகனைப் பார்த்தார். சில நிமிடங்களிலேயே இந்தத் திருமண நிகழ்வு நடந்து முடிய, அதற்கான சான்றிதழை வழங்கினார் சப் ரெஜிஸ்டிரார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு