தொடர்ச்சியாக 8 முறை, மிகவும் பாரம்பரியமான பழம்பெரும் நம்பகமான பிராண்ட் விருது என்ற மதிப்புமிக்க விருதை வெல்வது தற்செயலான நிகழ்வு அல்ல. ஜிஆர்டியில் அப்படித்தான்! ஜிஆர்டியில் உருவாக்கப்படும் அனைத்தும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மையமாக கொண்டதாகும். உண்மையிலேயே சிறப்பான ஒன்றை உருவாக்க, வாடிக்கையாளரின் வாழ்க்கையின் பொன்னான தருணங்களை மையமாக வைத்திருப்பது அவசியம் ஆகும். இந்த அறம் சார்ந்த நெறிமுறையின் விளைவாக, ஜிஆர்டி தொடர்ந்து 8 வது முறையாக தமிழ்நாட்டில் மற்றும் கர்நாடகா, ஆந்திரா& தெலுங்கானாவில் தொடர்ச்சியாக 4 வது முறையாக, மிகவும் நம்பகமான பழம்பெரும் பிராணட்{Mast Trusted Legendary Brand) என பெயரிடப்பட்டுள்ள டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் வணிக விருதினை வென்றுள்ளது.

1964 இல் தொடங்கப்பட்டதிலிருந்து, ஜி.ஆர்டியில் ஷாப்பிங் செய்யும் போது வாடிக்கையாளர்களின் மனதில் திருப்தியையும் முகத்தில் புன்னகையையும் கொண்டு வருவது எப்படி என்பதைப் புரிந்துகொள்வதே ஜிஆர்டியின் முயற்சியாக இருந்து வருகிறது. இன்று இந்த எண்ணமே ஜிஆர்டியை இந்த முக்கியமான அங்கீகாரத்தை அடைய உந்துகோலாக இருந்தது.
இந்த மகிழ்ச்சியான தருணத்தில் பேசிய ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் திரு ஜி.ஆர். 'ஆனந்த்' அனந்தபத்மநாபன், "மற்ற அனைத்து நீங்கா நினைவுச்சின்ன சாதனைகளைப் போலவே, இதுவும் 5 தசாப்தங்களுக்கு மேலாக சரியான அடித்தளத்தில் ஜிஆர்டியை உருவாக்கிய பின்னரே வருகிறது. இதற்காகவே நாங்கள் இவ்வளவு காலம் பாடுபட்டோம் இப்போது பெருமை கொள்கிறோம்" என்று கூறினார்.
இதனுடன் ஜிஆர்டி ஜூவல்லாஸின் நிர்வாக இயக்குநா திரு ஜி.ஆா.ராதாகிருஷ்ணன் கூறுகையில், "எந்தவொரு பெரிய நிறுவனமும் சின்னஞ்சிறிய விவரங்களில்தான் கட்டமைக்கப்படுகிறது. இது அனைவரையும் நெருக்கமாக தொடுகிறது. பின்னர் அது பிராண்டின் பிம்பமாக மாறுகிறது. இன்று தொடர்ந்து 8வது முறையாக மிகவும் பாரம்பரியமான பழம்பெரும் நம்பகமான பிராண்ட் விருதினை பெறுவது ஆரம்பத்திலிருந்தே நாங்கள் சரியான பாதையில் சென்று வருகிறோம் என்பதை உண்மையாகவே காட்டுகிறது." என்றார்.