Published:Updated:

ரூ.191 கோடி, 7,000 கி.மீ பயணம்!- குஜராத் முதல்வருக்காகத் தயாராகும் சொகுசு விமானம்

குஜராத் முதல்வர் மற்றும் ஆளுநர் ஆகியோர் வெளிநாடு செல்வதற்காக 191 கோடி ரூபாயில் சொகுசு விமானம் ஒன்று தயாராகி வருகிறது.

விமானம்
விமானம்

குஜராத்தில் தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் பா.ஜ.க அரசு 191 கோடி ரூபாய்க்கு விமானம் ஒன்றை வாங்கியுள்ளது. `தற்போதைய பொருளாதாரநிலையில் இது அவசியமா?' என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்திருக்கிறது. இந்த விமானம் குஜராத்தின் முதல்வர் விஜய் ரூபானி, துணை முதலமைச்சர் நிதின்பாய் படேல், ஆளுநர் ஆச்சார்ய தேவரட் ஆகிய முக்கியத் தலைவர்களின் பயண வசதிக்காகத்தான் வாங்கப்பட்டுள்ளது.

விஜய் ரூபானி
விஜய் ரூபானி

191 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த விமானம் குறித்து விமானப் போக்குவரத்து இயக்குநர் அஜய் சௌஹன் கூறுகையில், “புதிதாக வாங்கியுள்ள இந்த விமானத்துக்கு ‘பம்பார்டியர் சேலன்ஞர் 650’ எனப் பெயர் வைத்துள்ளனர். சொகுசு வசதி அதிகம் உள்ள இந்த விமானத்தில் 12 நபர்கள் வரையில் பயணம் செய்ய முடியும்.

`ஏர் ஃபோர்ஸ் ஒன்-க்கு நிகரான பாதுகாப்பு; நவீன வசதிகள்!' - பிரதமர் மோடிக்காகத் தயாராகும் விமானம்

இதற்கு முன்னர் கடந்த 20 ஆண்டுகளாக குஜராத் அரசு உபயோகித்த விமானம் ‘பீச்கிராஃட் சூப்பர் கிங்’. இந்த விமானத்தில் 9 நபர்கள் வரையில் பயணம் செய்ய முடியும். இது ஒருமணி நேரத்துக்கு 870 கி.மீ வேகத்தில் பறக்கும். தற்போதைய challenger 650 விமானம், 7,000 கி.மீ வரை பயணம் செய்யக் கூடியது. இந்த விமானத்தின் பணிகள் கடந்த 5 வருடங்களாக நடைபெற்றன. இந்த மாத இறுதிக்குள் விமானம் பயன்பாட்டுக்கு வந்துவிடும்.

விமானம்
விமானம்

பழைய விமானத்தின் திறன், வசதி ஆகியவை மிகவும் குறைவாக இருந்த காரணத்தால் மற்ற நாடுகளுக்கு முதலமைச்சரால் பயணம் செய்ய முடியவில்லை. மேலும், தனியார் விமானத்தில் ஒரு மணி நேரத்துக்கு 1 லட்சம் ரூபாய் கேட்பதால் குஜராத் அரசு இந்தப் புதிய விமானத்தை வாங்க ஏற்பாடு செய்துள்ளது.

இந்த வகை விமானத்தை உபயோகிக்கப் பல்வேறு ஒப்புதல்களைப் பெற வேண்டும். மேலும், விமானத்தை இயக்குவதற்கு பைலட்டுக்கு 3 மாதப் பயிற்சி அளித்த பின்னரே விமானம் இயக்கப்படும்” எனவும் தெரிவித்திருக்கிறார்.