Published:Updated:

"பிரதமர் மோடிக்கு நன்றி!"- குஜராத் பா.ஜ.க வேட்பாளராக ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா தேர்வு

பிரதமர் மோடி,ரவீந்திர ஜடேஜா, ரிவாபா

குஜராத் பா.ஜ.க வேட்பாளராக மனைவி ரிவாபா தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து பிரதமர் மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் ரவீந்திர ஜடேஜா.

"பிரதமர் மோடிக்கு நன்றி!"- குஜராத் பா.ஜ.க வேட்பாளராக ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா தேர்வு

குஜராத் பா.ஜ.க வேட்பாளராக மனைவி ரிவாபா தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து பிரதமர் மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் ரவீந்திர ஜடேஜா.

Published:Updated:
பிரதமர் மோடி,ரவீந்திர ஜடேஜா, ரிவாபா

குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டசபை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு டிசம்பர் 1-ம் தேதியும், இரண்டாவது கட்டமாக 93 தொகுதிகளுக்கு டிசம்பர் மாதம் 5-ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. இதன் முடிவுகள் டிசம்பர் 8-ம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே குஜராத் சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் 160 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை இன்று பா.ஜ.க வெளியிட்டிருந்தது. இதில் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜாம்நகர் வடக்கு தொகுதி பா.ஜ.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து தன் மனைவி ரிவாபாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்ததோடு, வாய்ப்பளித்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "பா.ஜ.க தேர்தலில் வேட்பாளராகத் தேர்வான என் மனைவிக்கு வாழ்த்துகள். உன்னுடைய உழைப்பு மற்றும் முயற்சியைக் கண்டு நான் பெருமை அடைகிறேன். உனக்கு என்னுடைய வாழ்த்துக்கள். சமுதாய வளர்ச்சிக்காக உழைக்க வேண்டும். அவரது திறன்களில் நம்பிக்கை வைத்து, உன்னதமான பணியைச் செய்ய அவருக்கு வாய்ப்பளித்த எங்கள் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி ஜி மற்றும் ஸ்ரீ அமித் ஷா ஜிக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.