Published:Updated:

பூஜைக்காக ஒன்றுகூடிய மக்கள் - 150 ஆண்டுகள் பழைமையான குஜராத் பாலம் இடிந்து 100-க்கும் மேற்பட்டோர் பலி

இடிந்து விழுந்த பாலம்

குஜராத்தில் பழுதுபார்க்கப்பட்டு, திறக்கப்பட்ட மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

பூஜைக்காக ஒன்றுகூடிய மக்கள் - 150 ஆண்டுகள் பழைமையான குஜராத் பாலம் இடிந்து 100-க்கும் மேற்பட்டோர் பலி

குஜராத்தில் பழுதுபார்க்கப்பட்டு, திறக்கப்பட்ட மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

Published:Updated:
இடிந்து விழுந்த பாலம்

குஜராத் மாநிலம், மோர்பி நகரில் ஓடும் மச்சு ஆற்றில், நேற்று மாலை, வடமாநிலங்களில் மிகவும் பிரபலமான சாத் பூஜைக்காக ஒரே நேரத்தில் 500-க்கும் மேற்பட்டோர் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் பூஜை செய்த பொருள்களை ஆற்றில் போட்டுக்கொண்டிருந்தனர். அதில் அதிகமானோர் பெண்கள். இந்த நிலையில் திடீரென அந்த கேபிள் பாலத்தின் மத்தியப் பகுதி இடிந்து விழுந்தது. இதனால் பாலத்தில் நின்றிருந்தவர்கள் அப்படியே ஆற்றுக்குள் விழுந்தனர். அவர்களை தீயணைப்புத்துறையினரும், உள்ளூர் மக்களும், போலீஸாரும் இணைந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரமாக இந்த மீட்புப்பணி நடந்தது. இதில் அதிகாலை வரையில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். பாலம் இடிந்து விழுந்தபோது 100-க்கும் அதிகமானோர் ஆற்றில் விழுந்துள்ளனர்.

பூஜைக்காக ஒன்றுகூடிய மக்கள் - 150 ஆண்டுகள் பழைமையான குஜராத் பாலம் இடிந்து 100-க்கும் மேற்பட்டோர் பலி

இடிந்து விழுந்த பாலம், நேற்று முன்தினத்திலிருந்தே மிகவும் ஆபத்தான நிலையில் ஆடிக்கொண்டிருந்தது. அப்படியிருந்தும் மாநில அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நேற்று ஒரே நேரத்தில் 500 பேர் அதன்மீது நின்று பூஜை செய்ததால் பாலம் இடிந்துவிட்டது என்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள். ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட 150 ஆண்டுகள் பழைமையான இந்தப் பாலம், கடந்த 26-ம் தேதி குஜராத் புத்தாண்டு தினத்தன்றுதான் தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் பழுதுபார்க்கப்பட்டு திறக்கப்பட்டது. ஏழு மாதங்களுக்கு முன்புதான் பழுதுபார்ப்புக்காக மூடப்பட்டு, தற்போது திறக்கப்பட்டது. பாலம் இடிந்து விழுந்து ஏராளமானோர் கரைக்கு வருவதற்குப் போராடிக்கொண்டிருந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவிவருகிறது.

பூஜைக்காக ஒன்றுகூடிய மக்கள் - 150 ஆண்டுகள் பழைமையான குஜராத் பாலம் இடிந்து 100-க்கும் மேற்பட்டோர் பலி

நீச்சல் தெரிந்தவர்கள் நீந்தி, கரைக்கு வந்தனர். அதிகமானோர் இடிந்து விழுந்த பாலத்தைப் பிடித்துக்கொண்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். பாலம் இடிந்து விழுந்ததற்கு மாநில அரசு முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டிருக்கிறது. இது தொடர்பாக மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பிரிஜேஷ் கூறுகையில், ``பாலம் கடந்த வாரம்தான் பழுதுபார்க்கப்பட்டது. தற்போது இடிந்து விழுந்திருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. அரசு இதற்கு முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி முதல்வரிடம் பேசியிருக்கிறார். அரசு உயரதிகாரிகள் அனைவரும் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என்றார். கட்ச் மற்றும் ராஜ்கோட்டிலிருந்து மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டு, மீட்புப் பணிகள் நடந்துவருகின்றன. இது தவிர தேசியப் பேரிடர் மேலாண்மைப்படை, ராணுவம், கடற்படை, விமானப்படையினரும் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால் இரவில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் மீட்புப்பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பூஜைக்காக ஒன்றுகூடிய மக்கள் - 150 ஆண்டுகள் பழைமையான குஜராத் பாலம் இடிந்து 100-க்கும் மேற்பட்டோர் பலி

பிரதமர் மோடி இந்தச் சம்பவம் குறித்து அதிர்ச்சியும் இரங்கலும் தெரிவித்திருக்கிறார். மாநில முதல்வர் புபேந்தர பட்டேல் நடந்த சம்பவத்துக்கு அதிர்ச்சி தெரிவித்திருப்பதோடு இழப்பீடும் அறிவித்திருக்கிறார். அதோடு தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்துசெய்துவிட்டு விபத்து நடந்த இடத்துக்கு முதல்வர் விரைந்திருக்கிறார். ராஜ்கோட் எம்.பி மோகன் இது தொடர்பாக அளித்த பேட்டியில், ``இதுவரை 60-க்கும் அதிகமானோரின் உடல்கள் மீட்கப்பட்டிருக்கின்றன (நேற்றிரவு நிலவரப்படி). 79 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 60 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது” என்றார்.

பூஜைக்காக ஒன்றுகூடிய மக்கள் - 150 ஆண்டுகள் பழைமையான குஜராத் பாலம் இடிந்து 100-க்கும் மேற்பட்டோர் பலி

``இடிந்து விழுந்த பாலத்தைக் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் பழுதுபார்த்து 15 ஆண்டுகளுக்குத் தனது கட்டுப்பாட்டில் வைத்து பராமரிக்க மோர்பி மாநகராட்சி நிர்வாகம் தனியார் நிறுவனம் ஒன்றுக்குக் கொடுத்திருந்தது. அந்த நிறுவனம் பாலத்தைப் பழுதுபார்த்து எங்களுக்குச் சொல்லாமலேயே திறந்துவிட்டனர். பாலம் பாதுகாப்பு தணிக்கைகூட செய்யப்படவில்லை” என்று மாநகராட்சி அதிகாரி சந்தீப்சிங் தெரிவித்திருக்கிறார்.