Published:Updated:

`மணப்பெண்ணாக விருப்பம்; மனைவியாக வேண்டாம்!’ - தன்னைத்தானே திருமணம் செய்யும் பெண்; கோவாவில் தேனிலவு

Kshama Bindu ( Instagram )

’என் பெற்றோர் எனது திருமணத்துக்கு அங்கீகாரமும், ஆசீர்வாதமும் கொடுத்துள்ளனர். என் மகிழ்ச்சியே தங்களது மகிழ்ச்சி என்று தெரிவித்துவிட்டனர். திருமணத்தின்போது எடுத்துக்கொள்வதற்காக 5 உறுதிமொழிகளை எழுதி வைத்திருக்கிறேன்.’

`மணப்பெண்ணாக விருப்பம்; மனைவியாக வேண்டாம்!’ - தன்னைத்தானே திருமணம் செய்யும் பெண்; கோவாவில் தேனிலவு

’என் பெற்றோர் எனது திருமணத்துக்கு அங்கீகாரமும், ஆசீர்வாதமும் கொடுத்துள்ளனர். என் மகிழ்ச்சியே தங்களது மகிழ்ச்சி என்று தெரிவித்துவிட்டனர். திருமணத்தின்போது எடுத்துக்கொள்வதற்காக 5 உறுதிமொழிகளை எழுதி வைத்திருக்கிறேன்.’

Published:Updated:
Kshama Bindu ( Instagram )

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்லப்படுவதில் இருந்து, இன்று ஆண் - ஆண், பெண் - பெண் எனத் திருமணம் செய்துகொள்ளும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் வரை பலதரப்பட்ட திருமணங்களை பார்த்துவருகிறோம். இந்நிலையில், குஜராத்தை சேர்ந்த ஓர் இளம்பெண், தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்பது ஆச்சர்யமான செய்தி.

Kshama Bindu
Kshama Bindu
Instagram

குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த ஷமா பிந்து(24) என்ற பெண், இந்த புதுமையான திருமணத்தை செய்து கொள்ள இருக்கிறார். இத்திருமணத்திற்கு பிந்துவின் பெற்றோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். வரும் 11-ம் தேதி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடக்க இருக்கும் திருமணத்திற்கு இப்போதே பிந்து தன்னை தயார் படுத்திக்கொள்ள ஆரம்பித்துள்ளார். திருமண ஊர்வலம் இல்லை. ஆனால் திருமண சடங்குகள் உண்டு என்று கூறும் பிந்து தனது திருமணம் குறித்து கூறுகையில், ’இது நம்ப முடியாததாக இருக்கலாம். ஆனால் திருமணத்தில் அனைத்து சடங்குகளும் பாரம்பர்ய முறைப்படி நடக்கும்’ என்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து ’டைம்ஸ் ஆஃப் இந்தியா’வுக்கு பிந்து பகிர்ந்தபோது, ’எனக்குத் திருமணம் செய்துகொள்ளவதில் விருப்பமில்லை. ஆனால் நான் மணப்பெண்ணாக மாற விரும்பினேன். எனவே என்னை நானே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளேன். இது சுய திருமணம்.

Kshama Bindu
Kshama Bindu
Instagram

ஒரு வெப் சீரிஸில் நடிகை ஒருவர், ‘ஒவ்வொரு பெண்ணும் மணப்பெண்ணாக மாற விரும்புகிறார். ஆனால் மனைவியாக விரும்பவில்லை’ என்று கூறுவார். எனவே, நான் என்னையே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளேன். யாராவது இந்தியாவில் இது போன்று திருமணம் செய்திருக்கிறார்களா என்பது குறித்து இணையதளத்தில் தேடினேன். அப்படி யாரும் திருமணம் செய்திருக்கவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நமது நாட்டில் திருமணம் புனிதமானதாகக் கருதப்படுகிறது. மக்கள் தாங்கள் விரும்பும் நபரை திருமணம் செய்கின்றனர். நான் என்னை அன்பு செய்கிறேன். எனவேதான் என்னை நானே திருமணம் செய்துகொள்கிறேன். இதன் மூலம் நான் முழுமையான பெண் என்ற அங்கீகாரம் கிடைக்கிறது.

Kshama Bindu
Kshama Bindu
Instagram

ஆனால் சிலர், இது பொருத்தமற்றது என்று நினைக்கின்றனர். ஒருவேளை நான் நம் நாட்டில் சுயஅன்புக்கு முன்மாதிரியாக இருக்க முடியும் என்று நினைக்கிறேன். சுய திருமணம் என்பது, உங்கள் உறுதிப்பாடு மற்றும் நிபந்தனையற்ற அன்பை பொறுத்தது. என் பெற்றோர் எனது திருமணத்துக்கு அங்கீகாரமும், ஆசீர்வாதமும் கொடுத்துள்ளனர். எனது மகிழ்ச்சியே தங்களது மகிழ்ச்சி என்று தெரிவித்துவிட்டனர். திருமணத்தின்போது எடுத்துக்கொள்வதற்காக 5 உறுதி மொழிகளை எழுதி வைத்திருக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

11-ம் தேதி கோயிலில் திருமணம் செய்து கொள்ளும் பிந்து இரண்டு வாரம் கோவாவுக்கு தேனிலவுக்குச் செல்லவும் திட்டமிட்டு இருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism