Published:Updated:

`20 நாள்களாக அவரைக் காணவில்லை!’- ஹர்திக் படேல் மனைவி கண்ணீர் புகார்

ஹர்திக் படேல்
ஹர்திக் படேல்

குஜராத் படிதார் சமூகத்தின் தலைவராக உள்ள ஹர்திக் படேலை கடந்த 20 நாள்களாகக் காணவில்லை என்று அவரின் மனைவி புகார் அளித்துள்ளார்.

குஜராத்தைச் சார்ந்த படிதார் சமூகத்தினர், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கடந்த சில ஆண்டுகளாகப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கியவர் ஹர்திக் படேல். கடந்த 2017-ம் ஆண்டு குஜராத் சட்டமன்றத் தேர்தலில் ஹர்திக் படேல் முன்னெடுத்த போராட்டங்களும், பிரசாரங்களும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இதன் பிறகு குஜராத் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பிரபலமானார் ஹர்திக். தற்போது இவர் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக உள்ளார்.

ஹர்திக் படேல்
ஹர்திக் படேல்

இந்த நிலையில், கடந்த 20 நாள்களாக ஹர்திக் படேலைக் காணவில்லை என்று அவரின் மனைவி புகார் தெரிவித்துள்ளார். `என் கணவரைக் கடந்த 20 நாள்களாகக் காணவில்லை. அவர் இருக்கும் இடம் பற்றி எங்களுக்கு எந்தத் தகவலும் இல்லை. அவரைக் காணாமல் எங்கள் மொத்த குடும்பமும் மிகுந்த வருத்தத்தில் உள்ளோம்.

Vikatan

2017-ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின்போது என் கணவர் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் முடித்துவைக்கப்பட்டதாக அரசு கூறியது. இருந்தும் தற்போது வரை ஏன் இந்த அரசு என் கணவரைக் குறிவைக்கிறது என்று தெரியவில்லை. ஹர்திக், மக்களைச் சந்திப்பதையும் அவர்களிடம் பேசுவதையும் மக்களின் பிரச்னைகளை வெளியில் கொண்டுவருவதையும் இந்த அரசு விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

ஹர்திக் படேல்
ஹர்திக் படேல்

ஆனால், டெல்லி தேர்தலில் வெற்றி பெற்ற அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்து கடந்த 11-ம் தேதி ஹர்திக் படேலின் ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை தொடர்ந்து தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஹர்திக் படேல் கருத்துகளைப் பதிவிட்டுள்ளார். அதற்கு முன்னதாக, குஜராத் மாநிலத்தின் பஞ்சாயத்துத் தேர்தல்கள் வருவதால் அரசு தன்னைச் சிறையில் அடைக்க முயல்வதாக முன்னதாக படேல் குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் காணாமல் போயுள்ள விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு