Published:Updated:

உயிருடன் இருப்பதை நிரூபிக்கப் போராடும் 102 வயது முதியவர் - ஓய்வூதியம் நிறுத்தப்பட்டதால் அவதி!

102 வயது முதியவர்

102 வயது முதியவர் ஒருவர் இறந்துவிட்டதாகக் கூறி அவரின் ஓய்வூதியத்தை நிறுத்தியிருக்கிறது ஹரியானா அரசு.

உயிருடன் இருப்பதை நிரூபிக்கப் போராடும் 102 வயது முதியவர் - ஓய்வூதியம் நிறுத்தப்பட்டதால் அவதி!

102 வயது முதியவர் ஒருவர் இறந்துவிட்டதாகக் கூறி அவரின் ஓய்வூதியத்தை நிறுத்தியிருக்கிறது ஹரியானா அரசு.

Published:Updated:
102 வயது முதியவர்

ஹரியானாவைச் சேர்ந்த 102 வயது முதியவர் ஒருவர் இறந்துவிட்டதாகக் கூறி அவரின் ஓய்வூதியத்தை நிறுத்தியிருக்கிறது அந்த மாநில அரசு. அரசின் இந்தச் செயலை எதிர்த்து அந்த முதியவர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்.

ஹரியானாவின் ரோடக் மாவட்டத்தைச் சேர்ந்த தூலி சந்த், அவர் உயிருடன் இருப்பதை ஊடகங்கள் முன்னிலையில் நிரூபித்திருக்கிறார். மேலும், முதியவர் தூலி சந்த், நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் ஓய்வூதியத்தை தர வேண்டி ஊர்வலமாகச் சென்று போராடினார்.

102 வயது முதியவர்
102 வயது முதியவர்

``கடைசியாக என் ஓய்வூதியத்தை மார்ச் மாதம்தான் வாங்கினேன். அதன் பிறகு அதிகாரபூர்வ ஆவணங்களில் நான் இறந்ததாகக் கூறப்பட்டதால், அரசாங்கம் என் ஓய்வூதியத்தை நிறுத்திவிட்டது. அதிலிருந்து நான் உயிருடன் இருப்பதை நிரூபிக்க போராடிக்கொண்டிருக்கிறேன். ஆனால் ஒரு பயனும் இல்லை" என்கிறார் சந்த். அடையாள அட்டை, பான் கார்டு, குடும்ப அட்டை, வங்கிக் கணக்குகள் என அனைத்து அடையாளச் சான்றுகளையும் ஊடகங்கள் முன் அவர் சமர்ப்பித்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஹரியானா குறைகள் நிவர்த்தி மற்றும் கண்காணிப்பு அமைப்பிடம் இதைப் பற்றி கடந்த மாதமே புகார் அளித்தும், இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சந்தின் பேரன் குற்றம்சாட்டுகிறார்.

முதியவர்
முதியவர்

ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் ஹரியானா பகுதித் தலைவரான நவீன் ஜெய்ஹிந்த், ``முதியவரின் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுவிட்டதால் அவர் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியிருக்கிறார். அவர் இறந்துவிட்டதாகவே கூறிவிட்ட அதிகாரிகள் அவரின் ஓய்வூதியத்தை நிறுத்திவைத்திருக்கின்றனர். இது தொடர்பாக மாநில முதல்வரிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்றார்.