Published:Updated:

`6 -வது மாடி; போர்வை, ப்ளாஸ்டிக் பைகள்!’ -கொரோனா வார்டிலிருந்து தப்ப முயன்றவருக்கு நேர்ந்த சோகம்

ஹரியானா மருத்துவமனை
ஹரியானா மருத்துவமனை ( dianik bhaskar.com )

கொரோனா தொற்று இருப்பது இப்போது வரை உறுதிசெய்யப்படாத நிலையில் முதியவர் இவ்வாறு செயல்பட்டது மருத்துவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் உலக நாடுகள் அனைத்தும் ஸ்தம்பித்து நிற்கின்றன. கொரோனா பாதித்தவர்களுக்குப் பொதுவான அறிகுறிகள் இருக்கும். ஆனால் அறிகுறிகள் இல்லாத சிலருக்கும் கூட ரிசல்ட் பாசிட்டிவாக வருகிறது எனத் தமிழகச் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனா - கொரோனா வைரஸ்
சீனா - கொரோனா வைரஸ்
AP

அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமின்றி வெளிநாடுகள், வெளி மாநிலங்களுக்குச் சென்று வந்தவர்களும் தாங்களாகவே முன்வந்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று உலக நாடுகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன.

`மருத்துவருக்கு கொரோனா; தனிமைப்படுத்தப்பட்ட செவிலியர்கள்..' – மூடப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் கல்பனா சாவ்லா மருத்துவக் கல்லூரியின் கொரோனா சிகிச்சைப் பிரிவில் கொரோனா அறிகுறி இருப்பதாக அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் மருத்துவமனையிலிருந்து தப்பிக்க முயன்றபோது பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

ஹரியானவைச் சேர்ந்த 58 வயது முதியவர் ஒருவர் கொரோனா அறிகுறி இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சேர்ந்ததிலிருந்தே, ’நான் வீட்டுக்குச் செல்ல வேண்டும்’ என்று அவர் மருத்துவர்களிடம் கூறி வந்துள்ளார். ஆனால் அறிகுறிகள் தீவிரமாக இருந்ததால் மருத்துவர்கள் அந்தப் பெரியவரைத் தனிமைப்படுத்தி சிகிச்சையளித்து வந்துள்ளனர்.

மருத்துமனையிலிருந்து தப்பிக்க நினைத்த பெரியவர், அங்கிருந்த போர்வைகள், பிளாஸ்டிக் கவர்கள் இவற்றையெல்லாம் ஒன்றாக இணைத்து, ஜன்னல் கம்பியில் கட்டி ஆறாவது மாடியிலிருந்து குதித்து தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால் பிளாஸ்டிக் கவர்கள் அறுந்ததால் கீழே விழுந்து இறந்திருக்கிறார். கொரோனா தொற்று இருப்பது இப்போது வரை உறுதிசெய்யப்படாத நிலையில் முதியவர் இவ்வாறு செயல்பட்டது மருத்துவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மருத்துவமனையின் பாதுகாப்புகள் பற்றியும் கேள்வி எழுந்துள்ளது.

 அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு
அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு

இதேபோல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர் ஒருவரும் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தப்பிக்க முயன்றுள்ளார். பலத்த காயத்தோடு உயிருக்குப் போராடிவரும் அவரைக் காப்பாற்ற மருத்துவர்கள் தீவிரமாக முயன்று வருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு