Published:Updated:

`தாய்நாடு ஆபத்தில் உள்ளது’ - தாயின் மரணத்தை அறிந்தும் தூய்மைப் பணியைத் தொடர்ந்த அதிகாரி!

``என்னுடைய தாயின் மரணத்தை காலை 8 மணி அளவில் நான் அறிந்தேன். நான் தாய்நாட்டுக்குச் செய்ய வேண்டிய கடமையும் இருந்தது. தாய்நாடு ஆபத்தான நிலையில் உள்ளது” - அஷ்ரப் அலி

கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தொடர்ந்து அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா பரவுவதைத் தடுக்க தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பணியாளர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். இந்த நிலையில், சுகாதாரப் பணியாளர்கள் தங்களது தனிப்பட்ட துயரங்களைப் பகிர்ந்துள்ளனர்.

பணியாளர்கள்
பணியாளர்கள்

மத்தியப்பிரதேச மாநிலம் போபால் கார்ப்பரேஷனில் பணிபுரிந்து வருகிறார், அஷ்ரப் அலி. இவர் தூய்மைப் பணியின் முக்கியப் பொறுப்பாளராக இருந்து வருகிறார். கடந்த புதன்கிழமை அவர் பணி செய்துகொண்டிருக்கும்போது அவருடைய தாய் இறந்துவிட்ட செய்தியை அறிந்துள்ளார். தன்னுடைய பணியை பாதியிலேயே விட்டுவிட்டு வீட்டுக்குச் செல்ல அவரிடம் நியாயமான காரணங்கள் இருந்தன. எனினும், தனது பணியைத் தொடர்ந்து செய்துள்ளார். மதிய வேளையில் தன்னுடைய தாயின் இறுதிச் சடங்குக்குச் சென்றுவிட்டு பின்னர் மீண்டும் பணிக்கு வந்துள்ளார்.

நாங்க என்ன செய்றது ? கொரோனா கெடுபிடியால் கலங்கும் ஆதரவற்றோர் |Corona Updates

``ஒருவருக்கு தாயைவிட மதிப்புமிக்கது எதுவும் இல்லை” என்று பேசத்தொடங்கிய அஷ்ரப், ``என்னுடைய தாயின் மரணத்தை காலை 8 மணி அளவில் நான் அறிந்தேன். நான் தாய்நாட்டுக்கு செய்ய வேண்டிய கடமையும் இருந்தது. தாய்நாடு ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே, மதியம் என்னுடைய தாயின் இறுதிச் சடங்குக்குச் சென்றுவிட்டு பணிக்குத் திரும்பினேன்” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

போபால் கார்ப்பரேஷனின் மற்றொரு உறுப்பினரான இர்பான் கான் கடந்த திங்கள் கிழமை அன்று விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்துள்ளார். மருத்துவர்களின் ஆலோசனைகளைத் தவிர்த்து மீண்டும் பணிக்கு வந்துள்ளார். ``கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றிபெற நாம் அனைவரும் சில தியாகங்களைச் செய்ய வேண்டும். மருத்துவர்கள் என்னை ஓய்வெடுக்கச் சொன்னார்கள். ஆனால், எனக்கு ஒதுக்கப்பட்ட பணியை முடிக்க வேண்டியுள்ளது. இவை அசாதாரண காலங்கள் ஆகும்” என்று தெரிவித்துள்ளார்.

உலகளவில் இந்த வைரஸுக்கு இதுவரை சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 25,000-க்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர். இதனிடையே, வைரஸுக்கு எதிராக தங்களது சொந்தப் பிரச்னைகளை ஒதுக்கி வைத்துவிட்டுப் போராடி வரும் ஒவ்வொரு பணியாளர்களையும் அனைவரும் பாராட்டிய வண்ணம் உள்ளனர்.

Credits : NDTV

`சிகிச்சையில் 2 பேர்; தனிமைப்படுத்தப்பட்ட 2,268 பேர்!’ -நெல்லையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு