Published:Updated:

உடல்நல பாதிப்பு... இலங்கையில் அடைக்கலம் நாடும் நித்தியானந்தா... என்னதான் ஆச்சு?!

நித்தியானந்தா

``அடுத்த 200 ஆண்டுகளுக்கு நான் வாழப்போகிறேன். அந்த அளவுக்கு உடம்பைத் தயார் பண்ணியிருக்கிறேன்" என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீடியோ ஒன்றில் உரையாற்றியிருந்தார் நித்தியானந்தா.

உடல்நல பாதிப்பு... இலங்கையில் அடைக்கலம் நாடும் நித்தியானந்தா... என்னதான் ஆச்சு?!

``அடுத்த 200 ஆண்டுகளுக்கு நான் வாழப்போகிறேன். அந்த அளவுக்கு உடம்பைத் தயார் பண்ணியிருக்கிறேன்" என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீடியோ ஒன்றில் உரையாற்றியிருந்தார் நித்தியானந்தா.

Published:Updated:
நித்தியானந்தா

பாலியல் வழக்கு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கித்தவித்த நித்தியானந்தா, பின்னர் தலைமறைவானார். அவர், 'கைலாசா' என்ற தனித்தீவு வாங்கி அங்கு குடியேறிவிட்டதாகவும், அதற்கு தான் அதிபர் என்றும், பலதுறைகளுக்கும் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அவரே அறிவித்தார். அவர் உண்மையில் தனித்தீவு வாங்கியிருக்கிறாரா அல்லது ஏதேனும் ஓர் இடத்தில் பதுங்கியிருக்கிறாரா என்ற பல்வேறு கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்காமலேயே இருக்கிறது. இருந்தபோதிலும், இணையவழியில் லைவ் மூலம் அவ்வப்போது பேசிவருகிறார் நித்தியானந்தா.

நித்தியானந்தா
நித்தியானந்தா

இந்நிலையில், கடந்த மே மாதம் நித்தியானந்தா உடல்நலக் குறைவுக் காரணமாக இறந்துவிட்டார் என்று தகவல் காட்டுத்தீபோல பரவியது. ஆனால், சிறிது நாள்களிலேயே “எனக்கு உடல்நிலை சரியில்லை என்பது உண்மை. எனக்கு 27 டாக்டர்கள் மருத்துவம் செய்தும், என்ன பிரச்னை என்பதைக் கண்டறிய முடியவில்லை. எனக்கு ஞாபகமறதியும் ஏற்பட்டுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால், இவற்றிலிருந்தெல்லாம் விரைவில் மீண்டும் வருவேன்” என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார் நித்தியானந்தா, “திரும்பி வந்துட்டேன்னு சொல்லு” என்று தன் கைப்பட காகிதத்தில் எழுதும் வீடியோவையும் அதோடு சேர்த்து வெளியிட்டு தனது இருப்பை உறுதி செய்திருந்தார். அவருக்கு உடலநலக் குறைவு ஏற்பட்டதுபோல், சோர்வாக இருக்கும் சில போட்டோக்களும் வெளியாகின.

நித்தியானந்தா விளக்கம்
நித்தியானந்தா விளக்கம்

இது ஒருபுறமிருக்க, நித்தியானந்தா சமாதிநிலைக்குச் சென்றிருக்கிறார் என்றும், அதிலிருந்து வந்த பின்னர் 21 நாள்கள் ஆன்மிகப் பயிற்சி வகுப்பை நடத்துவார் என்றும் தகவல் பரப்பினர் அவரின் சீடர்கள். "அடுத்த 200 ஆண்டுகளுக்கு நான் வாழப்போகிறேன்டா. அந்த அளவுக்கு உடம்பைத் தயார் பண்ணியிருக்கேன். நீ உட்கார்ந்து ட்ரோல் பண்ணிக்கிட்டே இரு" என்று சில மாதங்களுக்கு முன்பாக வீடியோ ஒன்றில் உரையாற்றியிருந்தார் நித்தியானந்தா.

இந்நிலையில்தான், கைலாசா தீவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும் ஆனந்த சுவாமி என்பவர், ஆகஸ்ட் மாதம், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஒரு கடிதம் எழுதியதாகக் கூறப்படுகிறது. அந்தக் கடிதத்தில், ``ஸ்ரீநித்தியானந்தா பரமசிவம் சுவாமிகளின் உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. தற்போது கைலாசாவிலுள்ள மருத்துவ வசதிகளைக்கொண்டு அவரின் உடலுக்கு என்ன என்பதைக் கண்டுபிடிக்க மருத்துவர்களால் முடியவில்லை. தற்போதைய நிலையில், நித்தியானந்தாவுக்கு அவசர மருத்துவச் சிகிச்சை தேவை. இலங்கை அரசு அவருக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும்.

ரணில் விக்ரமசிங்க
ரணில் விக்ரமசிங்க

அவரின் மருத்துவத்துக்கு உதவி செய்வதுடன், அவரின் பாதுகாப்பையும் உறுதிசெய்ய வேண்டும். நித்தியானந்தாவின் மருத்துவச் சிகிச்சைக்குத் தேவையான அனைத்துச் செலவுகளையும் கைலாசா அரசே ஏற்றுக்கொள்ளும். அவருக்குத் தேவையான லட்சக்கணக்கான டாலர் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை கைலாசா அரசு வாங்கிக்கொடுக்கும். அந்த அனைத்து மருத்துவ உபகரணங்களையும் உங்கள் நாட்டு மக்களுக்குக் கொடுத்துவிடுகிறோம். நித்தியானந்தாவுக்கு அடைக்கலம் கொடுக்கும் பட்சத்தில் நித்யானந்தா இலங்கையில் முதலீடு செய்வார்" என்று தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

உடல்நிலை மோசமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், 4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆவணித் திருவிழாவை முன்னிட்டு லைவ் வீடியோவில் வந்து அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறார் நித்தியானந்தா.

இது தொடர்பாக நித்தியானந்தாவின் நகர்வுகளை உன்னிப்பாக கவனித்துவருபவர்களிடம் பேசினோம். ``நித்தியானந்தா வனாடூ எனும் தீவில் மிகவும் குறைவான நபர்களுடன் வசித்துவருகிறார் என்பது தகவல். அவருக்குத் தற்போது மிகக் கடுமையாக உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. அதன்படி, சிகிச்சைக்காக இலங்கைக்குச் செல்ல அனுமதி கேட்டு கடிதம் எழுதியது உண்மைதான்.

நித்தியானந்தா
நித்தியானந்தா

தற்போது இலங்கையும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருப்பதால், முதலீடு, பல லட்சம் டாலர் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் என்று ஆசையைத் தூண்டியிருக்கிறார். ஆனால், இலங்கைத் தரப்பில் இன்னும் பதில் எதுவும் கொடுக்கப்படவில்லை. இந்த விவகாரம் வெளியானதால், செப்.4-ம் தேதி மாலையில் லைவ் வீடியோ ஒன்றை கிளப்பிவிட்டியிருக்கிறது நித்தி தரப்பு. அதாவது, ஆவணி திருவிழாவை முன்னிட்டு காட்சியளிப்பதுபோல நித்தியானந்தா லைவ் வந்திருக்கிறார். ஆனால், இது ஒரிஜினல் இல்லை. தலைப்பாகை அணிந்தும், கிரீடம் அணிந்தும் இரு பழைய வீடியோக்களை ஒன்றிணைத்து வெளியிட்டிருக்கிறார்கள். இதன் மூலம், நித்தி ஆக்டிவ்வாக இல்லை என்பது தெளிவாகிறது. ஒருவேளை இலங்கை அரசு நித்திக்கு அனுமதி கொடுத்தால், அவரின் நிலைமை வெட்டவெளிச்சமாகலாம்" என்றனர்..