Published:Updated:

மகாராஷ்டிரா: கனமழை, ஆற்றைக்கடக்க முயன்ற கார் அடித்துச்செல்லப்பட்டதில் 3 பேர் பலி; 3 பேரைக் காணவில்லை

மும்பை கடற்கரையில் ராட்ச அலை

மகாராஷ்டிராவில் மும்பை உட்பட மாநிலம் முழுவதும் கனமழை பெய்துவருகிறது. நாக்பூர் அருகே கார் ஒன்றை வெள்ளம் அடித்துச் சென்றதில் ஆறு பேர் உயிரிழந்தனர் என அஞ்சப்படுகிறது.

மகாராஷ்டிரா: கனமழை, ஆற்றைக்கடக்க முயன்ற கார் அடித்துச்செல்லப்பட்டதில் 3 பேர் பலி; 3 பேரைக் காணவில்லை

மகாராஷ்டிராவில் மும்பை உட்பட மாநிலம் முழுவதும் கனமழை பெய்துவருகிறது. நாக்பூர் அருகே கார் ஒன்றை வெள்ளம் அடித்துச் சென்றதில் ஆறு பேர் உயிரிழந்தனர் என அஞ்சப்படுகிறது.

Published:Updated:
மும்பை கடற்கரையில் ராட்ச அலை

மகாராஷ்டிராவில் கடந்த ஒன்றாம் தேதியிலிருந்து தொடர்ச்சியாக மழை பெய்துவருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை ஒருசில இடங்களில் பாதிக்கப்பட்டுவருகிறது. மும்பையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் நேற்று வசாய் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் நான்கு பேர் சிக்கிக்கொண்டனர். அவர்களில் இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர், ஒருவர் உயிரிழந்துவிட்டார். மற்றொருவரை மீட்கும் பணி நடந்துவருகிறது. மலையிலிருந்து பாறை ஒன்று உருண்டு வந்து வீட்டின் மீது விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டது.

அந்தேரி சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் வேறு வழித்தடத்தில் திருப்பிவிடப்பட்டுள்ளன. கனமழையால் பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸ் உட்பட பல இடங்களில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது. நகரின் பல இடங்களில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மழை வெள்ளத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்லவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. ரயில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியதால் புறநகர் ரயில்கள் தாமதாக இயக்கப்படுவதாக மத்திய, மேற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கனமழை இருக்கும் என்பதால் மக்கள் தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியில் வர வேண்டாம் என்று போலீஸார் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடலில் அலைகள் 5 மீட்டர் உயரத்துக்கு எழுந்தன.

தண்ணீரில் அடித்துச் செல்லப்படும் கார்
தண்ணீரில் அடித்துச் செல்லப்படும் கார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மும்பையில் 20 இடங்களில் காலை 11:50 வரை 50 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை வெள்ளிக்கிழமை வரை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நாக்பூர் அருகே சாவ்னார் என்ற இடத்தில் கனமழையால் மழைநீர் வெள்ளம் பாலம் தாண்டி சென்றுகொண்டிருந்தது. பாலத்தின் இருபுறமும் எந்த வித தடுப்பும் இல்லை. இந்த நிலையில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் திருமணத்துக்குச் சென்றுவிட்டு காரில் வந்தனர். அவர்களது கார் பாலத்தைக் கடக்க முயன்றபோது காரை மழை வெள்ளம் ஆற்றுக்குள் இழுத்துச் சென்றுவிட்டது. காரில் இருந்தவர்களில் இரண்டு பேர் மட்டும் நீந்தி கரைக்கு வந்துவிட்டனர். காரில் இருந்தவர்களில் மூன்று பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மூன்று பேரைக் காணவில்லை.

சாலையில் மழை நீர்
சாலையில் மழை நீர்

அவர்களும் இறந்திருப்பார்கள் என்று கருதப்படுகிறது. தேசியப் பேரிடர் மேலாண்மைப் படையினர் அவர்களைத் தேடிவருகின்றனர். மகாராஷ்டிராவில் பெய்துவரும் கனமழையால் கடந்த ஒன்றாம் தேதியிலிருந்து இதுவரை 90-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மழை அதிகமாகப் பெய்யும் இடங்களில் மீட்புப் பணிகளுக்காக தீயணைப்புப் படையினர், தேசியப் பேரிடர் மேலாண்மைப் படையினர் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.