Published:Updated:

டவ்தே புயலால் மும்பையில் பலத்த காற்றுடன் கனமழை; விமான நிலையம் மூடப்பட்டது!

மும்பையில் கனமழை

டவ்தே புயல் மும்பையை நோக்கி வருவதால், மும்பையில் பலத்த காற்றுடன் கன மழை பெய்துவருகிறது. முன்னெச்சரிக்கையாக மும்பை விமான நிலையம் மூடப்பட்டது.

டவ்தே புயலால் மும்பையில் பலத்த காற்றுடன் கனமழை; விமான நிலையம் மூடப்பட்டது!

டவ்தே புயல் மும்பையை நோக்கி வருவதால், மும்பையில் பலத்த காற்றுடன் கன மழை பெய்துவருகிறது. முன்னெச்சரிக்கையாக மும்பை விமான நிலையம் மூடப்பட்டது.

Published:Updated:
மும்பையில் கனமழை

டவ்தே புயல் கேரள கடற்பகுதியிலிருந்து கர்நாடகா வழியாக கோவா வந்து, அங்கிருந்து மும்பையை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. இதனால் மகாராஷ்டிராவின் கொங்கன் மண்டலம் மற்றும் மும்பையில் நேற்று இரவிலிருந்தே மழை பெய்துகொண்டிருக்கிறது. மும்பையில் பலத்த காற்றுடன் மழை பெய்துவருவதால், ஆங்காங்கே மரங்கள் ஒடிந்து விழுந்துகொண்டிருக்கின்றன. மும்பை மட்டுமல்லாமல் தானே, பால்கர் மாவட்டத்திலும் கன மழை பெய்துவருகிறது. இதனால் நகரில் மோனோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

அதோடு மும்பை விமான நிலையமும் காலை 11 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்களில் மரங்கள் ஒடிந்து விழுந்தன.

மும்பையில் கனமழை
மும்பையில் கனமழை

தீயணைப்புத்துறையினர் அவற்றை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மும்பையில் கனமழை பெய்துவருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா சிகிச்சைக்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களிலிருந்து 500-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். மும்பையில் கனமழை பெய்யும் பட்சத்தில் புறநகர் ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்படும். இதற்காக முன்னெச்சரிக்கையாக தேவையான ஊழியர்கள் ரயில் தண்டவாளங்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேசியப் பேரிடர் மீட்புப் படையினரும் முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர். மாலைக்குள் புயல் மகாராஷ்டிராவைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
டவ்தே புயலால் மும்பையில் பலத்த காற்றுடன் கனமழை; விமான நிலையம் மூடப்பட்டது!
PremKumar SK

மும்பையில் கடற்படையினரும் தயார்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். புயல் கரையைக் கடக்கும்போது கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மும்பையில் கனமழையால் பாதிக்கப்படும் மக்களைத் தங்கவைப்பதற்காக தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொங்கன் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் மரங்கள் ஒடிந்து விழுந்துள்ளன. புயல் காரணமாக பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புயல் மும்பையில் அரபிக்கடலின் தென்மேற்கில் 160 கிலோமீட்டர் தொலைவில் குஜராத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. மாலையில் புயல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் மிகவும் கடுமையானதாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குஜராத் மற்றும் மகாராஷ்டிரா அதிகாரிகளுடன் இது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism