Published:Updated:

`கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சுருங்கிய லாக் டெளன்’ - மத்திய அரசின் `UNLOCK 1.0’ ஹைலைட்ஸ்

ஊரடங்கு
ஊரடங்கு

``சிறப்பு ரயில்கள், பயணிகள் ரயில்கள், உள்நாட்டு விமான சேவை, வெளிநாட்டு விமான சேவை ஆகியவை பழைய கட்டுப்பாடுகளுடன் தொடரும்”

இந்தியா முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு 4.0 நாளையுடன் முடிவடையும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் ஜூன் 1 -ம் தேதி முதலான நடைமுறைகள் குறித்து புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. `UNLOCK 1.0’ என்ற பெயரில் புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது குறிப்பிடதக்கது. மூன்று கட்டங்களாக இந்த தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கு
ஊரடங்கு

முதற்கட்டமாக, வழிபாட்டு தளங்கள் பொதுமக்களுக்கு திறக்கப்படுகிறது. அதேபோன்று, உணவகங்கள், ஷாப்பிங் மால் உள்ளிட்டவை கட்டுப்பாடுகளுடன் இயங்குக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் இரண்டாம் கட்டம் ஜூலை மாதம் தொடங்கும். அப்போது கல்வி நிறுவனங்கள் திறப்பது தொடர்பாக மாநிலங்களின் ஆலோசனைகளின்படி முடிவெடுக்கப்படும்.

மூன்றாம் கட்டத்தில் திரையரங்குகள், நீச்சல் குளங்கள், மெட்ரோ ரயில், பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்டவை திறக்கப்படும். இயல்புநிலைக்கு படிப்படியாக திரும்ப மூன்று கட்டங்களாக இந்த ஊரடங்கு பிரித்து அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

11 நகரங்கள் டார்கெட்; கோயில்கள் திறப்பு? - 5ம் கட்ட ஊரடங்கு தகவலும் உள்துறை அமைச்சகத்தின் விளக்கமும்

அதில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கிய அறிவிப்புகள் :

* நாடு முழுவதும் உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் மாதம் 30 -ம் தேதி வரையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும். கட்டுப்பாடு இல்லாத பகுதிகளில் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கும்.

* அந்த அந்த மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை மாவட்ட நிர்வாகமே முடிவு செய்யலாம்

* பொது இடங்களில் முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் கட்டாயம்.

* இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இந்த நேரங்களில் மக்கள் வெளியே நடமாடத் தடை.

* சிறப்பு ரயில்கள், பயணிகள் ரயில்கள், உள்நாட்டு விமான சேவை, வெளிநாட்டு விமான சேவை ஆகியவை பழைய கட்டுப்பாடுகளுடன் தொடரும்.

* வெளிமாநிலங்களுக்கு இடையேயான பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்துகளுக்கு தடையில்லை. இந்தப் பயணங்களுக்கு இ-பாஸ் வாங்க வேண்டிய அவசியம் இல்லை.

ஊரடங்கு
ஊரடங்கு

* கடைகளில் 5 நபருக்கு மட்டுமே அனுமதி. பொது இடங்களில் அதிக எண்ணிக்கையில் கூடுவதும் தடை செய்யப்படுகிறது.

* திருமணம் மற்றும் மரணம் உள்ளிட்ட துக்க நிகழ்ச்சிக்கான கட்டுப்பாடுகள் முன்பைப் போலவே தொடர்கிறது.

* பொது இடங்களில் மது, போதைப் பொருட்களை பயன்படுத்துவது தடை செய்யப்படுகிறது.

கட்டுப்பாடுகள் தொடரும் துறைகள்!

சர்வதேச விமான போக்குவரத்து, மெட்ரோ ரயில், திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளம், அரங்குகள், அனைத்து விதமான பொதுக்கூட்டங்கள். இவை மூன்றாம் கட்டதித்தில் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டம் முடியும் போது, இருக்கும் சூழலை பொறுத்து அது முடிவெடுக்கப்படும்.

ஊரடங்கு கற்றுத்தரும் நிதிப் பாடங்கள்! - முதலீடு செய்வது ஏன் அவசியம்?
அடுத்த கட்டுரைக்கு